5 விக்கெட் வீழ்த்தியது மிக முக்கியமானது: ஜடேஜா

புதன்கிழமை, 12 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 13 - சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மே.இ.தீவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெ ட் வீழ்த்தியது எனது கிரிக்கெட் வாழ்க் கையில் மிக முக்கியமானது என்று ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரி வித்தார். இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை க்கான போட்டிகள் கடந்த இரண்டு வார காலமாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 

தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற் று வருகின்றன. அடுத்ததாக அரை இறு திச் சுற்று நடக்க இருக்கிறது. இதில் பங் கேற்று வரும் ஒவ்வொரு அணிகளும் அரை இறுதியை எட்ட ஆர்வம் காட்டி வருகின்றன. 

இந்திய அணி முதல் லீக்கில் தென் ஆப் பிரிக்கா அணியை தோற்கடித்தது. பின் பு நடந்த 2-வது லீக்கில் மே.இ.தீவு அணியை வென்றது. 

மே.இ.தீவுக்கு எதிரான இந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தி யாசத்தில் எளிதான வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்த 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகார் தவான் சதம் அடித்து அணியை வெற் றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

முன்னதாக பெளலிங்கின் போது ஆல்ர வுண்டர் ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 36 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் கைப் பற்றினார். இறுதியில் ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச் சென்றார். 

சமீபத்தில் முடிவடைந்த ஐ.பி.எல். போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப் பாக செயல்பட்டார். சாம்பியன் லீக்கி லும் அவரது சிறப்பான ஆட்டம் தொ டர்கிறது. 

மே. இ.தீவுக்கு எதிரான ஆட்டம் குறித் து ஜடேஜாவிடம் கேட்ட போது, அவ ர் கூறியதாவது - எனது பந்து வீச்சில் இந்த ஆட்டம் மிக முக்கியமானது. 

இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்னதாக நான் 3 முறை 4 விக்கெட் வீழ்த்தி இருந்தேன். ஆனா ல் இது மிக விசேஷமானது. நான் எப் போதும் மிகவும் அலட்டிக் கொள்ள மாட்டேன். பிரச்சினைகளை எளிதாக எடுத்துக் கொள்வேன். 

இந்த ஆட்டத்தில் நான் சரியான அளவி ல் பந்து வீச முயற்சி செய்தேன். ஓவல் மைதானம் உலர்ந்து போய் இருந்தது. சுழற் பந்து வீச்சிற்கு அது உதவாது . இங்கு விக்கெட் கிடைக்காமல் போய் இருந்தால் கூட நான் கவலைப்பட்டு இருக்க மாட்டேன். 

கடந்த 6 மாத காலமாக மற்ற பிரச்சி னைகள் குறித்து கவலைப்படாமல் நான் கடும் பயிற்சிகளை மேற்கொண்டேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 

நான் இதற்கு முன்னதாக அடுத்த போ  ட்டிகள் குறித்து அதிகம் அலட்டிக் கொள்வேன். இதனால் குழப்பம் ஏற்பட்டது. 

தற்போது ஒரு போட்டியில் மட்டு ம் கவனம் செலுத்தி வருகிறேன். இதனா  ல் சூழ்நிலைக்கு ஏற்ப என்னால் சிறப் பாக ஆட முடிகிறது. 

எனது திறமை மீது நம்பிக்கை வைத்து எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்த கேப்டன் தோனிக்கு நான் நன்றி தெரி வித்துக் கொள்கிறேன். 

தோனி ஒரு சிறந்த கேப்டன். வீரர்களி ன் திறமயை அவர் நன்கு எடை போட்டு விடுவார். அவர் என் மீது வைத்த நம்பிக்கைக்காக நான் இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 

மே.இ.தீவின் அதிரடி வீரர்களான கிறி ஸ் கெய்ல் மற்றும் பொல்லார்டு குறித் து நான் கவலைப்படவில்லை. சரியா  ன அளவில் பந்துகளை வீசினேன். பேட்ஸ்மேன்கள் தவறுகள் செய்து மா  ட்டிக் கொண்டனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பீல்டிங் நன்றாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: