முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் சுட்டுக்கொலை - எஸ்.எம். கிருஷ்ணா கருத்து

திங்கட்கிழமை, 2 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.3 - அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தலைவன் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொலை செய்திருப்பது உலக அளவில் தீவிரவாதத்தை ஒழிப்பதில் கிடைத்த மாபெரும் வெற்றி என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள அபோடாபாத் நகரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது அமெரிக்க படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உலக அளவில் பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவதில் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையில் கிடைத்துள்ள ஒரு மாபெரும் வெற்றியாகும். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக இருந்து வருகிறது. அதை ஒழித்துக்கட்டுவதிலும் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதிலும் வெற்றி கிடைக்கும் என்று அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பின்லேடனை பிடிக்க அமெரிக்க ராணுவம் முயற்சி செய்து வந்தது. தற்போது பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டான் என்று அதிபர் ஒபாமா கூறியிருப்பது அவனை தேடும் பணி முடிவுக்கு வந்துவிட்டது. இது தீவிரவாத ஒழிப்பு வரலாற்றில் ஒரு சாதனை மட்டுமல்லாது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த வருடங்களில் தீவிரவாதிகளால், அப்பாவி குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் எஸ்.எம். கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்