முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஜூன். 14 - சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் மாஸ்கோவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் ரஷ்ய அதிபராக புதின் பதவியேற்றார். பதவியேற்பு விழாவின் போது வன்முறையில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சியை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமீன் கிடைத்ததால் அவர்கள் ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களை விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதை புதின் அரசு ஏற்கவில்லை. இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புதின் எதிர்ப்பாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று திரண்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 27 பேரை உடனே விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியும் நடத்தினர். புதினுக்கு எதிராக நடந்த பேரணியில் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவாங்னி, தனது மனைவியுடன் பங்கேற்றார். பேரணியில் சென்றவர்கள் புதினுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago