முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் கோப்பை: ஆஸ். - நியூசி. மோதிய ஆட்டம் ரத்து

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பிர்மிங்ஹாம், ஜூன். 14 - ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிர்மிங்ஹாமில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே யான ஆட்டம் மழையினால் கைவிடப் பட்டது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவ ர்களை ஆடியது. பின்பு நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் கை விடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி அளிக்கப்பட்டது. 

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் 7-வது லீக் ஆட்டம் நாட்டிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. இதில் குரூப் ஏ பிரிவைச் சேர்ந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய கேப்டன் பெய்லி தலைமையி லான ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 243 ரன்னை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிடில் ஆர்டர் பேட்ஸ் மேனான வாக்ஸ் அதிகபட்சமாக 76 பந்தில் 71 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். கேப்டன் பெய்லி 91 பந் தில் 55 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்ட ரி அடக்கம். 

தவிர, கீப்பர் வடே 57 பந்தில் 29 ரன்னையும், எம். மார்ஷ் 22 ரன்னையும், மேக்ஸ்வெல் 29 ரன்னையும், ஜான்சன் 8 ரன்னையும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மெக்லினா கன் 65 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். தவிர, எல்.மெக்குல் லம் 2 விக்கெட்டும், வில்லியம்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி 244 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி வைத்தது. ஆனால் பின்பு மழை குறுக்கிட்டது. 

நியூசிலாந்து அணி 15 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்னை எடுத்த போ து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி அளிக்கப்பட்டது. 

நியூசிலாந்து அணி தரப்பில், வில்லியம்சன் 18 ரன்னுடனும், டெய்லர் 9 ரன்னு டனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். 

முன்னதாக, கீப்பர் ரோஞ்சி 14 ரன்னிலும், குப்டில் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் மெக்கே 10 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்