முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒசாமாவைக் கொல்ல ஏப். 29-ம் தேதியே ஆணையில் கையெழுத்திட்ட ஒபாமா

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மே 3 - பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொல்வதற்கான மரண சாசனத்தில் கடந்த ஏப்ரல் 29 ம் தேதியே அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கையெழுத்து போட்டுவிட்டார். அமெரிக்காவால் கடந்த 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அல் காய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற இடத்தில் பதுங்கி இருப்பது அமெரிக்க உளவு படையான சி.ஐ.ஏ.வுக்கு கடந்த ஏப்ரல் மாத இறுதியிலேயே நன்கு தெரிந்துவிட்டது. இதையடுத்து எந்த நேரத்திலும் ஒசாமாவைக் கொல்ல அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். துல்லியமான இடத்தை கண்டுபிடித்துவிட்டதால் இனி ஒசாமா இம்மியளவும் தப்பிக்க முடியாது என்ற நிலைக்கு அமெரிக்க ராணுவத்தினர் வந்தனர். 

ஒசாமா தங்கியிருந்த இடம், அவனைக் கொல்ல எப்படி நடவடிக்கை மேற்கொள்வது என்பது போன்ற அனைத்து விபரங்களும் பாரக் ஒபாமாவிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பின்லேடனைக் கொல்வதற்கான மரண சாசன ஆணையில் கடந்த 29 ம் தேதி அமெரிக்க நேரப்படி காலை 8.20 மணிக்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள தூதரக அறையில் ஒபாமா கையெழுத்திட்டார்.  அதன்பிறகு அவர் அலபாமா புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அதே தூதரக அறையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலான் அந்த அரசு ஆணையை முறையான ஆணையாக தயாரித்து உயர்மட்ட கூட்டம் ஒன்றை அதேநாள் மதியம் 3 மணிக்கு கூட்டினார். அப்போது இந்த திட்டத்திற்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. இந்த ரகசிய திட்டம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை வெள்ளை மாளிகையில் பல்வேறு கட்டங்களாக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்