முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்ககாரா சதம்: இலங்கை அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 15 ​- சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  அந்த அணியில் ஆட்டமிழக்காமல் சங்ககாரா 134 ரன்களும் குலசேகரா 58 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 47.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 297 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாகும். 

டாஸ் வென்ற இலங்கை அணி இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தது. இதை தொடர்ந்து கேப்டன் குக், இயான் பெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி மெதுவாக விளையாடியது. இதனால் முதல் 10 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த ஜோடியை பிரித்தார் இலங்கையின் சமிந்தா எரங்கா. 20 ரன்கள் எடுத்திருந்த பெல் எரங்கா பந்து வீச்சில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஜொனாதன் டிராட்பெல்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியதால் அணியின் ரன் விகிதம் மெதுவாக உயர்ந்தது. இதனால் 22.5 ஓவரில் அந்த அணி நூறு ரன்களை கடந்தது. இதனிடையே குக் 72 பந்துகளில் அரை சதமடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் அதிரடியாக விளையாடினார். மறுபுறம் பொறுமையாக விளையாடி வந்த டிராட் அரை சதம் கண்டார். அணியின் ஸ்கோர் 218 ஆக உயர்ந்த போது 76 ரன்கள் எடுத்திருந்த டிராட் ஆட்டமிழந்தார். அப்போது 42 ஓவர் முடிந்திருந்தது. அடுத்து களமிறங்கிய வீரர்கள் இறுதிக்கட்டத்தில் இலங்கை வீரர்களின் பந்து வீச்சை விளாசி தள்ளினர். அதிரடியாக விளையாடிய ரூட் 55 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. பொபாரா 33 ரன்களும், ப்ராடு 7 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் மட்டும் இங்கிலாந்து அணி 28 ரன்கள் எடுத்தது. எரங்கா வீசிய அந்த ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார் பொபாரா. கடினமான இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய இலங்கை அணி தனது முதல் விக்கெட்டை விரைவிலேயே இழந்தது. தொடக்க வீரர் பெரேரா 6 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து தில்ஷான் 44 ரன்களிலும், ஜெயவர்த்தனே 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த களமிறங்கிய குலசேகரா சங்ககாராவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. 111 பந்துகளில் சங்ககாரா சதமடித்தார். மறுபுறம் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் குலசேகரா. அவர் 30 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் அரை சதமடித்தார். இறுதியில் இலங்கை அணி 47.1 ஓவர்களில் 297 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சங்ககாரா 134 ரன்களுடனும், குலசேகரா 58 ரன்களுடனும் இறுதி வரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago