முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜின்னாவின் வீட்டை குண்டு வைத்துத் தகர்த்த தீவிரவாதிகள்

சனிக்கிழமை, 15 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன். 16 - பாகிஸ்தானின் தந்தையாக போற்றப்படும் முகம்மது அலி ஜின்னாவின் வீட்டை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

தென் மேற்கு பலுசில்ஸாதனில் 121 ஆண்டு கால பழமை வாய்ந்த ஜின்னாவின் வீடு உள்ளது. இந்த வீட்டைத்தான் தற்போது தீவிரவாதிகள் குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர். இதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். வீடும் பெருமளவில் சேதமடைந்து விட்டது. ஜியாரத் என்ற இடத்தில் இந்த வீடு உள்ளது. தலைநகர் குவெட்டாவிலிருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

குண்டு வைத்ததோடு துப்பாக்கியாலும் சரமாரியாக சுட்டுத் தாக்கினர் தீவிரவாதிகள் என்று போலீஸார் கூறியுள்ளனர். வீட்டில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடினர். இருந்தாலும் வீட்டின் பெரும் பகுதி சேதமடைந்து விட்டது. இருப்பினும் செங்கல் பகுதிகள் பாதிக்கப்படவில்லை. மிகவும் வலிமையாக அவை இருப்பதால் சேதமடையவில்லை. ஆனால் மேற்கூரை உள்ளிட்டவை சேதமடைந்து போய் விட்டன.

இந்த வீடு 1892 ம் ஆண்டு கட்டப்பட்து. கோடை காலத்தில் இங்கிலாந்து கவர்னர் ஜெனரல் இந்த வீட்டில்தான் தங்கியிருப்பார். தனது வாழ்க்கையின் கடைசி நாட்களை இந்த வீட்டில்தான் ஜின்னா கழித்தாராம். பின்னர் இது தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்