முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக வில்வித்தை: இந்தியாவுக்கு வெள்ளி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூன். 17 - உலக வில்வித்தை போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. ஒரு புள்ளியில் இந்தியா தங்க பதக்கத்தை இழந்தது. 2013 ம் ஆண்டுக்கான உலக வில்வித்தை போட்டி 5 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று சீனாவில் ஷாங்காய் நகரில் மே மாதம் நடைபெற்றது. இந்நிலையில் துருக்கியின் அன்டாலியா நகரில் இரண்டாம் சுற்று தொடங்கியது. இப்போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரஜத் செளகான் மற்றும் மன்ஜூதா சாய்லாஸ்ட் ஜோடி ஒரு புள்ளிகள் குறைவாக பெற்று வெள்ளி பதக்கம் வென்றது. 

இத்தாலியின் செர்ஜியோ பக்னி மற்றும் மர்சில்லா டோனியல்லி ஜோடி தங்க பதக்கம் வென்றது. இப்போட்டியின் மூன்றாவது சுற்று முடிவில் இந்திய ஜோடி 112 -111 என்ற புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்தது. ஆனால் இறுதி சுற்றில் இந்திய ஜோடி குறி வைத்த இலக்கு சில மில்லி மீட்டர் தவறியதில் 149 - 150 என்ற புள்ளி கமக்கில் பின்தங்கி இரண்டாம் இடத்தை பிடித்தது. இப்போட்டியின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கவில்லை. முன்னதாக சீனாவில் நடைபெற்ற உலக வில்வித்தையின் முதல் சுற்று போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்