முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3ஜி இண்டர்நெட்: கூகுளின் புதிய அறிமுகம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

வெலிங்டன், ஜூன். 17 - ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களை வானில் பறக்க விட்டுள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் போதும் மக்கள் இடையூறின்றி இணையத்தை பயன் படுத்த முடியும் என கூகுள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

தானியங்கி கார், கூகுள் கண்ணாடி போன்றவற்றைத் தயாரித்த கூகுள் நிறுவனத்தின் பிரத்தியேகக் குழுதான் இந்த பலூனையும் தயாரித்துள்ளது. இப்புதிய முயற்சிக்கு பிராஜெக்ட் பலூன் என பெயரிட்டுள்ளது கூகுள். முதற்கட்டமாக 30 ஹீலியம் பலூன்களை மட்டுமே பறக்க விட்டு சோதனை செய்துள்ள கூகுள் விரைவில் அனைவரும் பயன் படுத்தும் வகையில் விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்