முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் கொல்லப்பட்டது எப்படி? பரபரப்பு தகவல் அம்பலம்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே. 3 - கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த தீவிர வாதத் தலைவன் பின்லேடன் அமெரிக்க உளவுப் படையால் கொல் லப்பட்டது எப்படி? என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதன் விபரம் வருமாறு - 

அமெரிக்க கமாண்டோ படையால் பின்லேடன் கொல்லப்பட்டான். இந்த தாக்குதலில் அவனது மகனும், குடும்பத்தினர் மற்றும் மெய்க் காப்பாளர்கள் சிலரும் பலியாகி உள்ளனர். 

அல்கொய்தா தலைவராக இருந்த பின்லேடனை நள்ளிரவில் அமெரி க்க படை சுட்டுக் கொன்று விட்டது. உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாபாத்தில் இருந்து 62 மைல் தூரத்தில் அபோடாபாத் என்ற இடம் உள்ளது. இங்கு உள்ள ஒரு வீட்டுக்குள் பின்லேடனும் அவனது மகன் மற்றும் குடுப்பத்தினர் தங்கி இருந்தனர். 

பின்லேடன் பதுங்கி இருப்பதை அமெரிக்க உளவுத் துறை சில நாட்க ளுக்கு முன்பே கண்டு பிடித்துவிட்டது. ஆனால் இந்த தகவலை பாகி ஸ்தான் உள்பட எந்த நாட்டுக்கும் அமெரிக்கா தெரிவிக்கவில்லை. 

அதே சமயம் பின்லேடனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்க அமெரிக்க ராணுவம் ரகசிய திட்டம் தீட்டியது. அமெரிக்காவிலேயே அதி பர் ஒபாமா உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் தெரியும். 

இதில் அமெரிக்க ராணுவத்தின் சீல் எனப்படும் கமாண்டோக்கள் இடம் பெற்றனர். இவர்கள் தரையிலும், கடலிலும், ஆகாயத்திலும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கும் பயிற்சி பெற்றவர்கள். 

இவர்களில் சிறு குழு மட்டும் தேர்வு செய்யப்பட்டு நள்ளிரவில் அபோடாபாத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் அனுப்பப்பட்டது. 

அப்போது எந்திர கோளாறு காரணமாக ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. 

இருந்தாலும், ராணுவ காமாண்டோக்கள் பின்லேடன் பதுங்கி இருந்த பங்க்ளா மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பின்லேடனும், அவனது மகனும் கொல்லப்பட்டனர்.  

பின்லேடனுக்கு மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட ஒரு பெண் உள்பட மேலும் 4 பேர் தாக்குதலில் பலியானார்கள். பின்லேடன் கொல்லப்பட்டு அவனது உடலை ராணுவம் கைப்பற்றியது. 

பின்லேடன் தலையில் குண்டு பாய்ந்ததால் இறந்திருந்தான். ஆனால் அவனை முதலில் சுட்டது யார்? என்று தெரியவில்லை. இந்த நடவடி க்கையின் போது, பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகள் சிலரும் அங்கிருந்ததாக கூறப்படுகிறது. 

அமெரிக்க படையினர் தாக்குதலை முடித்ததும் பின்லேடன் உடலுட ன் உடனடியாக வெளியேறிவிட்டனர். அந்த பங்க்ளா முழுவதும் தக ர்க்கப்பட்டது .எந்திரக் கோளாறால் கீழே விழுந்த ராணுவ ஹெலி காப்டரும் தாக்கி அழிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago