முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13-வது சட்ட திருத்தம்: மனசாட்சி அடிப்படையில் வாக்கெடுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜூன். 17 - இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13 வது திருத்தத்திற்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதன் மீது மனசாட்சி அடிப்படையில் வாக்கெடுப்பு கோர அந்நாட்டு அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.  தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் முதன் முறையாக செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக மாகாணங்களுக்கான அதிகாரத்தை குறைப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்தின் 13 வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளும், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

சட்ட திருத்தம் மீதான வாக்கெடுப்பின் போது மூன்றில் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவை பெறுவது கடினம் என ராஜபக்சே கருதுகிறார். இந்நிலையில் மனசாட்சி அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஜதிக ஹெல் உருமயா கட்சியின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள ராஜபக்சே முடிவு செய்துள்ளார். இதன் படி வாக்கெடுப்பின் போது அரசியல் கட்சிகள் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே இந்த சட்ட திருத்தம் இந்தியா - இலங்கை இடையிலான 1987 ம் ஆண்டு ஒப்பந்தத்துக்கு எதிராக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டணி கூறியுள்ளது. இது தொடர்பாக இந்திய தலைவர்களை சந்தித்து முறையிடவும் அக்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்துக்கு செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அப்பகுதியில் அதிபர் ராஜபக்சே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கிளிநொச்சியில் தமிழர்கள் மத்தியில் அவர் பேசுகையில், 

கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரை பார்த்தீர்கள். முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த 4 ஆண்டுகளாக வளர்ச்சி பணிகளை பார்க்கிறீர்கள். அரசு மீதான தவறான கண்ணோட்டத்தை மறந்து விடுங்கள் என்றார். தேர்தலில் தமது கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் ராஜபக்சே அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்