முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் அதிபர் தேர்தலில் ஹசன் ரெளஹானி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

டெஹ்ரான், ஜூன். 17 - ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிதவாத கட்சியை சேர்ந்த ஹசன் ரெளஹாலி 51 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 8 ஆண்டு கால பழமைவாத கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 

இது தொடர்பாக ஈரான் உள்துறை அமைச்சர் முகமது மொஸ்தபா நஜ்ஜார் கூறுகையில், நடைபெற்ற அதிபர் தேர்தலில் 3.67 கோடி பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்காளர்களில் 72.7 சதவீதம் ஆகும். இதில் ஹெளஹானிக்கு ஆதரவாக 1.86 கோடி அல்லது 50.68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து ஈரானின் புதிய அதிபராக ரெளஹானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இவருக்கு அடுத்தபடியாக தெஹ்ரான் மேயர், முகமது பக்கர் காலிபப் 60 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். சயீத் ஜலிலி என்பவர் 31.7 லட்சம் வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார். தொடர்ந்து 2 வது முறையாக அதிபராக உள்ள முகமது ஆஹமதிநிஜாத் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அந்நாட்டு சட்டப்படி 2 தடவைக்கு மேல் தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்