முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஸ்கோ செஸ்: இந்திய வீரர் ஆனந்த் 3-வது சுற்றில் வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மாஸ்கோ,ஜூன். 17 - ரஷ்யாவில் நடைபெற்று வரும் சர்வ தேச செஸ் போட்டியின் 3-வது சுற்றில் உலக சாம்பியனான விஸ்வனாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். கடந்த 2 சுற்றுக்களில் மோசமாக ஆடி தோல்வி அடைந்த ஆனந்த் இந்த சுற்றி ல் ரஷ்ய வீரர் அலெக்சாண்டரை தோற் கடித்து தனது நிலையை ஸ்திரப்படுத்தி இருக்கிறார். ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவி ல் தல் நினைவு செஸ் போட்டி கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற சர்வதேச அளவில் முக்கிய கிராண்ட மாஸ்டர்கள் களம் இறங்கி உள்ளனர். இந்தப் போட்டி தற்போது விறுவிறுப் பாக சென்று கொண்டு இருக்கிறது. 

சர்வதேச அளவில் முக்கிய போட்டிகளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் புத்தி சாதுர் யமாக காய்களை நகர்த்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

இந்தப் போட்டியின் 3-வது சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வனாதன் ஆனந்தும், ரஷ்ய முன்னணி வீரரும் மோதினர். 

பரபரப்பாக நடைபெற்ற இந்த சுற்றில் இந்திய வீரர் ஆனந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரஷ்யவீரர் அலெக்சாண்டர் மோரோசெவிச்சை திணற வைத்து இறுதியில் வெற்றி பெற் றார். 

முன்னதாக நடந்த முதல் சுற்றில் ஆனந்த் இத்தாலி வீரர் பேபியானோவிட ம் தோற்றார் .பின்பு ,2-வது சுற்றில் ரஷ்ய சாம்பியன் டிமிட்ரியுடன் மோதினார் . இந்த ஆட்டம் டிராவானது. 

கடந்த 2 போட்டியில் தோல்வி அடைந்ததால் ஏமாற்றம் அடைந்திருந்த ஆனந்திற்கு 3-வது சுற்றில்கிடைத்த வெற்றி ஆறுதலை அளித்துள்ளது. 

மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி வீரர் கருவானாவும், நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனும் மோதினர். இதில் இத்தா லி வீரர் அபாரமாக ஆடி உலக நம்பர் - 1 வீரரான கார்ல்சனை தோற்கடித்தார். 

அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவும், ரஷ்ய வீரர் செர்ஜி கர்ஜாகினும் மற்றொரு ஆட்டத்தில் மோதினர். இதில் ஹிகாரு வெற்றி பெற்றார். 

இந்த சுற்றில் தோல்வி அடைந்ததால் நார்வே வீரர் கார்ல்சன் இணைந்த முதலிடத்தை இழந்தார். 

3-வது சுற்றின் முடிவில், ஷக்ரியார்,போரிஸ் ஜெல்பாண்ட், நகமுரா, ஆகியோர் தலா 2 புள்ளி பெற்று இணைந்த 2- வது இடத்திற்கு முன்னேறினர். 

ஆனந்த் தற்போது அன்ட்ரேகின் மற் றும் கார்ல்சன் ஆகியோருடன் இணைந்து 5-வது இடத்தில் உள்ளார். மேற்படி மூவரும் தலா 1.5 புள்ளி பெற்றுள்ளனர். 

புள்ளிகளுக்கான தரவரிசைப் பட்டிய லில் ரஷ்ய வீரர்களான மோரோசெ விச் மற்றும் கர்ஜாகின் இருவரும் 6-வது இடத்தில் உள்ளனர். அவர்கள் தலா 1 புள்ளி எடுத்துள்ளனர். 

மற்றொரு ரஷ்யவீரரான விளாடிமிர் கிராம்னிக் கடைசி இடத்தில் இருக்கிறார். அவர் முதல் சுற்றில் அஜர்பைஜா ன் வீரர் சக்ரியாருக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார். 

சமீப காலத்தில் சிறப்பாக நடந்து வரு ம் இந்த சூப்பர் போட்டியில் இன்னும் 6 சுற்றுக்கள் மீதமுள்ளன. இதில் இன் னும் எதிர்பாராத திருப்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்