முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 26 மணி நேரம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

திருமலை, ஜூன்.17 - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்துக்கு 26 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த மாதம் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பள்ளிகள் திறந்த பிறகு கூட்டம் குறைந்தது. 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையானதால் கூட்டம் கடந்த 2 நாள்களாக அதிகரித்தது.  காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 31 அறைகளும் நிரம்பி 2 கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 26 மணி நேரம் ஆனது. நடைபாதையில்  வரும் பக்தர்கள் 16 அறைகள் நிரம்பிய நிலையில் நாராயணகிரி பூங்காவில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதனால் திவ்ய தரிசனத்துக்கு  12 மணி நேரமும், 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனத்துக்கு  10 மணி நேரமும் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். தங்கும் அறைகள் கிடைக்காததால் பக்தர்கள் திறந்த வெளியில் தங்கினர்.  அன்ன பிரசாத கூடத்திலும் பக்தர்கள் காத்திருந்தனர். இலவச தரிசனம் மற்றும் திவ்ய தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிக அளவு இருந்ததால் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கட் நிறுத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்