முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். அரசை கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஜூன்.18 - காங்கிரஸ் அரசை கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையாநாயுடு சென்னையில் கூறினார்.

சென்னை தி.நகர், பா.ஐ.க. அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு காங்கிரஸ் அரசை அகற்ற கோரி பா.ஜ.க. சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கூறினார்.  மக்கள் விரோத காங்கிரஸ் அரசு மக்களுக்கு  எந்தவித நன்மையும் செய்யவில்லை, அதற்கு மாறாக ஊழல் செய்வதில் குறியாக உள்ளது என்றும், ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க. மாநில மக்கள் எழுச்சி மாநாடு தற்போது நடைப்பெற்று வருகிறது. நரேந்திரமோடியை தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பா.ஜ.க. உள்கட்சி விவகாரமே காரணம், இதில்  யாருக்கும்லையிட உரிமை இல்லை என்று வெங்கையாநாயுடு கூறினார். இந்த சந்திப்பின்போது இல.கணேசன், வானதி சீனிவாசன் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்