முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் 22 எம்.எல்.ஏ.க்கள் 2 நாள் சஸ்பென்ட்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

ஹைதராபாத், ஜூன்.18 - தெலுங்கானா பிரச்சனை தொடர்பாக  சபை நடவடிக்கைகளில் அடிக்கடி குறுக்கிட்டு சபையை நடத்த விடாமல் தடுத்ததாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, சுயேச்சை  உறுப்பினர்கள் உள்பட  22 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

இவர்களில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியைச் சேர்ந்தவர்கள் 17 பேர், பாஜகவைச் சேர்ந்தவர்கள் 3 பேர், இருவர் சுயேச்சை எம்.எல்,ஏ.க்கள். சபை நடவடிக்கை தொடங்கியதும், தெலுங்கானா அமைக்க வேண்டும் என்று கோரி சபையின்  மையப்பகுதிக்கு வந்து இவர்கள் கூச்சலிட்டனர். சபையில் கூச்சல், குழப்பம் நிலவியதால், சபாநாயகர் நாடெந்தலா மனோகர் இந்த பிரச்சனை தீர கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார்.

3 மணி நேரம் நடந்த கூட்டத்துக்குப் பிறகு சபையில் நடவடிக்கைகள்  தொடங்கியதும், தெலுங்கானா ராஷ்டிர  சமிதி, பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து சபையை நடத்த விடாமல் குறுக்கீடு செய்தனர்.  இன்னும் 5 நாள்களில் முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டும். எனவே அமைதி காக்குமாறு நிதி அமைச்சர் ஏனாம் ராமச்சந்கிர ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். பட்ஜெட் தொடர்பான துறை சார்ந்த கமிட்டி அறிக்கைகள் பற்றி விவாதிக்க வேண்டும். எனவே அந்த மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார், ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதை எற்கவில்ல. 

எனவே சபை நடவடிக்கைகளில் தகராறு செய்த உறுப்பினர்களை சஸ்பென்ட்

செய்யும் தீர்மானத்தை கொண்டுவருமாறு நிதி அமைச்சரை, சபாநாயகர் கேட்டுக்கொண்டார். தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதையடுத்து 22 எம்எல்ஏக்களும் 2 நாள்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அவர்கள் இருக்கையை விட்டு  எழுந்திருக்காமல் உட்கார்ந்துகொண்டு வெளியேறாமல் மறுப்பு தெரிவித்ததால் சபைக் காவலர்கள் வந்து அவர்களை வெளியேற்றினர். 

சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடத்திய தடியடியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி எம்எல்ஏ வெளிநடப்பு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்