முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியை நம்பினால் மோசம் போக வேண்டியதுதான்: அத்வானி

திங்கட்கிழமை, 17 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூன்.18 - ஒரே ஒரு தலைவரின் கீழ் லோக்சபா தேர்தலை சந்திக்க பாஜக முடிவு செய்தால், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அழிவில் போய் முடியும் என்று ராஜ்நாத் சிங்குக்கு அத்வானி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடியை மட்டும் நம்பி பிற கூட்டணிக் கட்சிகளை இழந்து விடக் கூடாது என்பதையே மறைமுகமாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அத்வானி. தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான 17 ஆண்டு கால கூட்டணியை முறித்துக் கொள்வது குறித்து ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களில் இந்த விவகாரம் தொடர்பாக ராஜ்நாத் சிங்கைத் தொடர்பு கொண்டு அத்வானி பேசியுள்ளார். அப்போது உடனடியாக பாஜக கூட்டத்தைக் கூட்டுமாறும், லோக்சபா தேர்தலை கூட்டுத் தலைமையின் கீழ் சந்திக்க முடிவெடுக்குமாறும் வற்புறுத்தினாராம். மேலும் ஒரே ஒரு தலைவரின் கீழ் தேர்தலை சந்திக்க முடிவு செய்தால், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சீர்குலைவுக்கு வித்திடும், கூட்டணி அழிந்து விடும் என்றும் அத்வானி, ராஜ்நாத் சிங்கை எச்சரித்தாராம். மோடி மீது அத்வானி சமீப காலமாக மிகக் கடுமையான அதிருப்தியில் உள்ளார். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்பதிலும் அவர் பிடிவாதமாக இருந்தார். அவருக்கு கட்சியில்உயர் பதவி தரவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஆனால் அதையும் மீறி கோவா மாநாட்டில், மோடிக்கு கட்சியின் பிரசாரக் குழுத் தலைவர் பதவியைக் கொடுத்தார் ராஜ்நாத் சிங். இந்த அதிருப்தியில் தான் அத்வானி கோவா கூட்டத்துக்கே போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்