முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை தொழிலதிபர் வீட்டில் கொள்ளை அடித்தவர்கள் கைது

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.3 - சென்னை தோல் தொழிலதிபர் வீட்டில் மூன்று தினங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1 கோடியே 35 லட்சம் வழக்கில் 2 கார் டிரைவர்களை போலீசார் கைது செய்து ரூ.1 கோடியே 25 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர். இது பற்றி விபரம் வருமாறு:-

சென்னை கீழ்ப்பாக்கம் மெக்னிக்கல் ரோட்டைச் சேர்ந்தவர் உமர்அகமது (38). தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தனக்கு சொந்தமான இடத்தை ரூ.1 1/2 கோடிக்கு விற்றார். அதற்கு பதிலாக வேறு இடத்தை வாங்குவதற்காக ரூ. 1 1/2 கோடி பணத்தையும் வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். கடந்த 21​ந்தேதி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் பணம் இருந்தது. அதன் பிறகு உமர்அகமது குடும்பத்துடன் ஆம்nullரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். 

பின்பு அவர் வீட்டுக்கு திரும்பினார். அவர் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த ரூ.1 1/2 கோடி பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. ஆனால் வீட்டு கதவும் உடைக்கப்படவில்லை. பீரோவும் திறக்கப்படவில்லை. இதனால் இந்த கொள்ளையில் மர்மம் நிலவியது. இது பற்றி உமர்அகமது கீழ்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். உமர் அகமது வீட்டு வேலைக்காரர் ஒருவர் அவரிடம் 22 வருடமாக வேலை பார்த்து வருகிறார். டிரைவர் ஒருவர் 3 1/2 வருடமாக பணிபுரிந்து வருகிறார். உமர்அகமது தனது வீட்டுக்கு மர பீரோ ஒன்று செய்ய ஆர்டர் கொடுத்திருந்தார். தான் ஆம்nullர் சென்று திரும்புவதற்குள் பீரோ தயாராகி வந்து விடும் என்பதால் அதை வீட்டுக்குள் கொண்டு வைக்க ஒரு சாவியை டிரைவர் மற்றும் வேலைக்காரனிடம் கொடுத்திருந்தார். அவர்கள் அந்த சாவி மூலம் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதையடுத்து அவர்களிடம் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் லட்சுமி, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் திருட்டில் ஈடுபடவில்லை என தெரியவந்தது. உமர்அகமது வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 54 வீடுகள் உள்ளன. எதிர் வீட்டில் பணிபுரியும் கார் டிரைவர் சிவா என்பவர்  திடீரென மாயமாகி விட்டார். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர் கொடைக்கானலில் இருப்பதாக அவரது செல்போன் டவர் காட்டியது. அவரை பிடித்து விசாரித்தபோது தானும் உமர் அகமது வீட்டு கார் டிரைவர் சந்திரசேகரும் சேர்ந்து கொள்ளையடித்ததாக சிவா ஒத்துக்கொண்டார். 

விசாரணையில் சிவா கூறியதாவது:-

உமர் அகமது தனது டிரைவர் சந்திரசேகரிடம் கொடுத்த சாவியின் மாதிரியை செய்து என்னிடம் கொடுத்து வீட்டிலுள்ள 1.35 கோடி பணத்தை கொள்ளையடிக்க சொன்னார். நானும் அதேபோல் பணத்தை கொள்ளையடித்தேன். கொள்ளையடித்த பணத்துடன் கொடைக்கானல் கிளம்பி வந்து விட்டோம். இங்கு வந்து போலீஸ் சென்னை பிடித்துவிட்டனர் என்று கூறியுள்ளான். அவனிடமிருந்து ரூ.1 கோடியே 28 லட்சத்தை போலீசார் மீட்டனர். மீதி பணத்தை செலவழித்து விட்டதாக சிவா தெரிவித்துள்ளான்.

சிவாவை கொடைக்கானலில் கைது செய்த போலீசார் சந்திரசேகரை சென்னையில் கைது செய்தனர். இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்