முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் டி.ஜி.பி.க்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.3 - முறைகேடான மின் இணைப்பை எதிர்த்தபோது கைது செய்யப்பட்ட பொது மக்கள் 14 பேரை விடுதலை செய்ய வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி.க்கு மார்க்சிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர் அருகில் உள்ள ஏரிக்கொல்ல மேடு கிராமத்தில் ஏரியை ஒட்டிய பகுதியில் சிகரலப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கோவிந்தராஜ் ஸ்ரீஅக்குவாபைன் இன்டஸ்டிரிஸ் என்கிற பெயரில் குடிநீnullர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது தொழிலகத்திற்கு ஏரிக்கொல்ல மேடு ஏரிக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் மாற்றி, மாற்றி உயர்அழுத்த மின்சாரம் கொண்டு   செல்வதற்கான மின்கம்பங்களை அமைக்க முயன்றுள்ளனர்.  இந்தப் பொதுப்பாதையையொட்டி தென்னை உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த வழியில் மின்இணைப்புக் கம்பங்களை அமைத்தால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் ​  உயிருக்கும் ஆபத்து ஏற்படும். 

மேலும், வியாபாரத்திற்கான குடிnullநீர்  தயாரிக்க  ஆழ்கிணறு அமைத்து  நிலத்தடி நீnullர் பெருமளவு உறிஞ்சப்பட்டால்   சுற்று வட்டார கிராம மக்களுக்கு குடிநீnullர் மற்றும் விவசாயத்திற்கு  பாதிப்பு ஏற்படும் என்பதால் முறைகேடான மின்பாதை இணைப்புக்கும், வியாபாரத்திற்கான குடிநீnullர் தயாரிப்பிற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது ஏப்ரல் 30 அன்று  காவல்துறையினர் தடியடி நடத்தி, 4 பெண்கள் உட்பட 14 பேரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். முறையாகப்பேசி தீர்வு காண வேண்டிய இப்பிரச்சனை தவறான  அணுகுமுறையால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக்கப்பட்டு, பொதுமக்கள் சிறையிலடைக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் தலையிட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள 14 பேரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், கிராம மக்கள் மீது  புனையப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago