முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தாரில் அரசியலில் மீண்டும் குதிக்க தயாராகும் தாலிபன்கள்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

தோஹா, ஜூன். 19 - அரசியலில் பிரவேசிக்கும் முடிவின் முதல் கட்டமாக, கத்தார் நாட்டில் அரசியல் அலுவலகம் தொடங்கும் முயற்சியில் தலிபான்கள் ்ஈடுபட்டுள்ளார்களாம். 2001 ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்த தலிபான்களை அமெரிக்கா தாக்கி அழித்து, அங்கு ஹமீத் கர்சாய் தலைமையில் அங்கு அரசு அமைத்தது.

தற்போது, ஹமீத் கர்சாய் அரசுக்கு எதிராகவும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கு எதிராகவும் தலிபான்கள் சண்டையிட்டு வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் இருக்கும்அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து அடுத்த இரு வருடங்களில் முழுமையாக வெளியேற இருக்கிறது.

சமீபத்தில், தலிபான்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் கட்சி தொடங்க வேண்டுமென்று அதிபர் கர்சாய் கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக அரபு நாடான கத்தார் நாட்டின் மன்னரை சந்தித்த கர்சாய், அங்கு தலிபான்கள் அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கர்சாயின் இத்தகைய செயல்களுக்கு இந்த ஆண்டு தொடக்கம் வரை எதிர்ப்பு தெரிவித்து வந்த தாலிபான்கள், தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளனராம். கத்தாரில் உள்ள தோஹாவில் தலிபான்கள் அரசியல் அலுவலகம் தொடங்க ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறதாம். தலிபான்களின் இந்த மன மாற்றம், அவர்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் நம்பப் படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago