முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதீஷ் அரசு வென்றது

புதன்கிழமை, 19 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூன். 20 - பீகார் சட்டசபையில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் வென்றது.17 ஆண்டு கால பா.ஜ.க. கூட்டணியை நிதீஷ் குமார் முறித்துவிட்டு வெளியேறிய கையோடு தமக்கு பெரும்பான்மை இருக்கிறது. அதனை சட்டசபையில் நிரூபிப்பேன் என்றார். ஆனால் பாஜகவோ நிதீஷ்குமார் அரசே ராஜினாமா செய்! என்று கோரி வருகிறது.

பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. நிதீஷ்குமாருக்கு 118 எம்.ல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 4 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ உள்ளார். பீகார் சட்டசபையில் 6 பேர் சுயேட்சைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சட்டசபை கூடிய போது நம்பிக்கை வாக்கு கோரும் ஒருவரித் தீர்மானத்தை முதல்வர் நிதீஷ்குமார் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் நிதீஷ்குமாருக்குக் கடும் கண்டனம் குஜராத் முதல்வர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். 

இத்தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில் பெரும்பான்மைக்காக குழப்பம் ஏற்படுத்துகிறார் நிதீஷ்குமார் என்று குற்றம்சாட்டி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்து விட்டனர். இதன் பின்னர் விவாத முடிவில் மிக நீண்ட உரையாற்றினார் நிதீஷ்குமார். பின்னர் நிதீஷ்குமார் அரசுக்கு ஆதரவு தெரிவிப்போர் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். அவர்கள் ஒவ்வொருவராக எண்ணப்பட்டு முடிவில் நிதீஷ்குமார் அரசு வென்றதாக அறிவிக்கப்பட்டது.

118 எம்.எல்.ஏக்களைக் கொண்ட நிதீஷ்குமார் அரசுக்கு வெற்றி பெற 122 எம்.எல்.ஏக்கள் தேவை. 4 எம்.எல்.ஏக்கள் கொண்ட காங்கிரஸ், 1 எம்.எல்.ஏ கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரித்தனர். இதனால் வெற்றிக்கான அவர்களிடமிருந்த 118 உறுப்பினர்கள் மற்றும் கூடுதலாக 6 பேரின் ஆதரவைப் பெற்று நிதீஷ் குமார் அரசு வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்