முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - ராஜஸ்தான் அணி அபார வெற்றி

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்பூர், மே. 3 - இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் ஜெய்பூரில் நடந்த லீக் ஆட்டத்தி ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை தோற்கடித்து இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில் பேட்டிங்கின் போது, டெய்லர் மற்றும் மெனேரியா இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். டிராவிட், போ த்தா, ரகானே, மற்றும் வாட்சன் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, ராஜஸ்தான் அணி சார்பில், திரிவே  தி நன்கு பந்து வீசி 2 முக்கிய விக்கெட்டை சாய்த்தார். தவிர, போத் தா, வாட்சன், மற்றும் வார்னே ஆகியோர் அவருக்கு பக்கபலமாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரங்கத்தில் 38 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் ராஜஸ்தான் அணியும் புனே வாரியர்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. புனே வாரியர்ஸ் அணி தரப்பில், ஜெய்சே ரைடர் மற்றும் பாண்டே ஆகியோர் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணி, 20 ஓவரில் 7 விக் கெட்டை இழந்து 143 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் 2 வீரர்கள் கால் சதம் அடித்தனர். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான  ராபின் உத்தப்பா அதிகபட்சமாக, 21 பந்தில் 35 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். இறுதியில், அவர் வார்னே வீசிய பந்தில் கீப்பர் யாக்னிக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

துவக்க வீரரான பாண்டே 31 பந்தில் 30 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். தவிர, மன்ஹாஸ் 19 பந்தில் 24 ரன்னையும், ரை டர் 18 ரன்னையும், ஹர்பிரீத் சிங் 13 ரன்னையும், எடுத்தனர். கேப்டன் யுவராஜ் சிங் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

ராஜஸ்தான் அணி சார்பில் திரிவேதி 28 ரன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் வீழ்த்தினார். தவிர, போத்தா, வாட்சன் மற்றும் வார்னே ஆகி யோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். மெனேரியா மற்றும் ஏ. சிங் ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 

ராஜஸ்தான் அணி 144 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை புனே அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19.3 ஓவரில், 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்னை எடுத்தது. 

இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புனே அணிக்கு எதிரான இந்த லீக்கில் 3 பந்து மீதமிருக்கையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத் தது. 

ராஜஸ்தான் அணி தரப்பில், டெய்லர் அதிகபட்சமாக, 35 பந்தில் 47 ரன்னை எடுத்தார். தவிர, மெனேரியா 22 பந்தில் 29 ரன்னையும், டிரா விட் 18 ரன்னையும், வாட்சன் மற்றும் போத்தா ஆகியோர் தலா 12 ரன்னையும் எடுத்தனர். 

புனே அணி சார்பில், ரோகித் சர்மா 13 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ ட் எடுத்தார். தாமஸ் 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக டெய்லர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்