முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமாத் உத்தவா அமைப்புக்கு பாக். ரூ.61 மில்லியன் நிதி

புதன்கிழமை, 19 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

லாகூர், ஜூன். 20 - 2008 ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் உத் தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு பட்ஜெட்டில் ரூ. 61 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது. பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷரீப் தலைமையிலான பி.எம்.எல். ன் அரசு 2013-2014 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் 2008 ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்திய அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஹபீஸ் சிதின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு ரூ. 61 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது. ஜமாத் உத் தவாவின் தலைமையிடம் லாகூருக்கு வெளியே இருக்கும் முரித்கேயில் உள்ளது. முரித்கேயில் நாலேஜ் பார்க் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் முஜ்தபா ஷஜாவுர் ரஹ்மான் அறிவித்துள்ளார். நாலேஜ் பார்க் மற்றும் இதர நடவடிக்கைகளுக்காக ரூ. 35 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2009-2010 ம் ஆண்டில் ஜமாத் உத் தவாவுக்காக பஞ்சாப் மாகாண அரசு ரூ. 82 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்