முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் வெள்ளம்: சாவு எண்ணிக்கை 140 ஆக உயர்வு

புதன்கிழமை, 19 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.20  - உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கில் மேலும் 9 பேர் இறந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை  140 ஆக உயர்ந்துள்ளது. ருத்ரபிரயாக், சமோலி ஆகிய மாவட்டங்களிலிருந்து இதுவரை 2700 யாத்ரீகர்கள் மீட்கப்பட்டனர். 

இந்த மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார். பத்ரிநாத் புனித ஸ்தலத்தில் 12000 பேர் சிக்கித் தவித்துள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்துள்ளது என்று இந்தோ- திபெத்தியன் எல்லைப் பகுதி போலீஸார் தெரிவித்தனர். காலநிலை ஓரளவு சீரானதால் 3 பட்டாலியன் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு இதுவரை 1000 பேரை மீட்டுள்ளனர் என்று அஜய் சதா கூறினார்.      

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மழை தொடர்ந்து  பெய்து வருவதாலும், வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை செயலர் ஆர்.கே. சிங் கூறினார். அமைச்சக அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்துவதற்கு முன்னர் சதா இதை நிருபர்களிடம் தெரிவித்தார்.

கேதார்நாத் வனப் பகுதி உள்ள பன்சிநாராயண் பகுதியிலிருந்து மேலும் 9 சடலங்ளை கிராமவாசிகள் மீட்டனர் என்று துயர்துடைப்பு நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். கங்காரியா, துயந்தர், புல்னா ஆகிய பகுதிகளில் 1500 யாத்ரீகர்களை கிராமவாசிகள் மீட்டதாக சமோலி கூடுதல் மாவட்ட கலெக்டர் சஞ்சய்குமார் தெரிவித்தார். காலநிலை ஓரளவு சாதகமாக உள்ளதால் மேலும் பல யாத்ரீகர்களை மீட்டதாகவும், பத்ரிநாத்தில் மேலும் 12 ஆயிரம் பேர் தவிப்பதாகவும் தெரிவித்தார்.

கேதார்நாத்திலிருந்து 12 00 பேர் வெளியேற்றப்பட்டதாக ருத்ரபிராயாகை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதுதான் எங்களது முக்கியப்பணி. இதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதற்குப் பிறகு இறந்தவர்களது சடலங்களை மீட்கிறோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். உத்தரகாண்டில் இதுவரை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.          

இமாச்சலபிரதேசத்தில் 2-வது நாளாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கின்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக இரு விமானமும், ஒரு ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெலிவிஷன் மற்றும் பத்திதிரிகை நிருபர்களை மீட்க ஒரு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர். எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள், முதியோர், சுகவீனமடைந்தவர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் தரப்பட்டு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது என்று இமாச்சல பிரதேச தலைமைச் செயலாளர் தருண்ஸ்ரீதர்

தெரிவித்தார். 

நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக இந்துஸ்தான் திபெத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசக்தில் சதா ஆற்றில் வெள்ளம் சிவப்பு அடையாளத்தை தாண்டி செல்கிறது. இதுபோல் ரப்தி, காக்ரா, புரிரப்தி, ரோஹினி, குனோ ஆகியவற்றிலும்அதிக வெள்ளம் செல்கிறது என்று மத்திய நதிநீர் குழு செய்திகள் தெரிவித்தன.

நேபாளத்திலுள்ள பன்பசாவில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றில் உள்ள பாலத்தில் போக்குவரத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதால் அரியானா, உ.பி. ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன.

கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து வருவதால் முஸாபர்நகர், ஷாம்லி மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. எதற்கும் மக்கள் பயப்படத் தேவையில்லை. டாக்டர்கள் ஆங்காங்கே சிகிச்சை அளித்து வருகின்றனர். புகழ்பெற்ற கேதார்நாத்தில் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்தனர். கேதார்நாத் கோவில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை மூலம் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்