முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியா இறுதிக்குள் நுழையுமா?

புதன்கிழமை, 19 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கார்டிப், ஜூன். 20 - சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்  போட்டியில் கார்டிப் நகரில் நடக்க இருக்கும் 2-வது அரை இறுதியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரிட்சை நடத்த உள்ளன. 

தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் இந்திய அணியின் ஆதிக்கம் இந்தப் போட்டியிலும் தொடருமா என்ற எதி ர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். 

மினி உலகக் கோப்பை என்று அழைக் கப்படும் ஐ.சி.சி. சார்பிலான சாம்பிய ன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 2 வார காலமாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பட்டத்தைக் கைப்பற்ற 8 அணிகள் கள ம் இறங்கின. இவை 2 பிரிவுகளாக கலந்து கொண்டன. 

முன்னதாக லீக் ஆட்டம் நடைபெற்ற து. இதில் ஏ பிரிவைச் சேர்ந்த அணிகள் தங்களுக்குள் மோதின. பி பிரிவைச் சேர்ந்த அணிகள் தங்களுக்குள் மோ தின. 

ஏ பிரிவில் இங்கிலாந்து மற்றும் இலங் கை அணிகள் முதல் மற்றும் 2-ம் இடத் தைப் பிடித்தன. பி பிரிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்தன. 

இதன் முதல் அரை இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில் ஏ பிரிவில் முத ல் இடம் பிடித்த இங்கிலாந்தும், பி பிரி வில் 2-ம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக் காவும் மோதின. 

இதனைத் தொடர்ந்து 2-வது அரை இறு திப் போட்டி கார்டிப் நகரில் இன்று நடக்கிறது. இதில் பி பிரிவில் முதல் இடம் பிடித்த இந்தியாவும், ஏ பிரிவில் 2-ம் இடம் பிடித்த இலங்கை அணியும் மோத உள்ளன. 

கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரி யத்தின் தலைவரான ஸ்ரீகாந்த் மாற்றப் பட்டு அவருக்குப் பதிலாக சந்தீப் பட்டீல் தலைவராக பொறுப்பேற்ற பின்பு இந்திய அணியில் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டது. 

இதன் எதிரொலியாக ஷிகார் தவான் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீர ர்கள் இந்திய அணியில் இடம் பெற்றனர். இதற்கு தற்போது நல்ல பலன் கிடை த்து வருகிறது. இந்திய அணி சமீப கால த்தில் வெற்றிகளைக் குவித்து வருகிறது. 

சாம்பியன் கோப்பைக்காக இங்கிலாந் து மண்ணில் இந்திய அணி இறங்கியது முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வரு கிறது. இதனால் இந்திய வீரர்கள் உற் சாகத்துடன் உள்ளனர். 

இந்நிலையில் கேப்டன் தோனி தலை மையிலான இந்திய அணி 2-வது அரை இறுதியில் துணைக் கண்டத்தைச் சேர்ந்த இலங்கை அணியுடன் இன்று கார் டிப் நகரில் மோத உள்ளது. 

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பெளலிங் இரண்டும் சிறப்பாக உள்ளன. பீல்டிங்கும் நன்றாக உள்ளது. இதனால் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

ஆனால் குமார் சங்ககக்கரா தலைமை யிலான இலங்கை அணி இந்தப் போட்டியில் முதலில் மந்தமாக ஆடியது. பின்பு நன்றாக ஆடி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. 

இந்திய அணி முதல் லீக்கில் மே.இ.தீவு அணியையும், 2-வது லீக்கில் தென் ஆப்பிரிக்கா அணியையும், 3-வது லீக் கில் பாகிஸ்தான் அணியையும் வென் று பி பிரிவில் முதல் இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. 

இலங்கை அணி முன்னதாக நடந்த 2- வது மற்றும் 3-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை தோற்கடித்து அரை இறுதி க்கு முன்னேறியது. 

தற்போது இலங்கை வீரர்களும் நல்ல தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகின்றனர். எனவே இந்தப் போட்டியில் கடும் சவாலை அளிக்கக் காத்திருக்கிறது. 

இந்த அரை இறுதிப் போட்டி கடந்த 2011 -ம் ஆண்டு உலகக் கோப்பை இறு திப் போட்டியை நினைவு படுத்தும் வகையில் உள்ளது. 

அந்த உலகக் கோப்பை போட்டியில் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் இல ங்கையை எளிதாக 6 விக்கெட் வித்தி யாசத்தில் வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது. கேப்டன் தோனி , குல சேகரா பந்தில் சிக்சர் அடித்து அணியி ன் வெற்றியை உறுதி செய்தார். 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளு க்கு இடையேயான 2-வது அரை இறு திப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் மற்று ம் தூர்தர்ஷன் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago