முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏகான் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சானியா ஜோடி வெற்றி

புதன்கிழமை, 19 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 20 - இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி னார். இதன் இரட்டையர் பிரிவில் இந்தியா வின் சானியா மிர்சா மற்றும் ஹூபர் (அமெரிக்கா) ஜோடி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.  

மகளிருக்கான டபிள்யு.டி.ஏ. சுற்றுப் பயணப் போட்டிகளில் ஒன்றான ஏகான் டென்னிஸ் போட்டி ஈஸ்டர் பிரவுன் நகரில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீராங்கனகள் களம் இறங்கி உள்ளனர். இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. 

சர்வதேச அளவில் முக்கிய போட்டிக ளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

இதன் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் டென் மார்க் வீராங்கனை கரோலின் வோஸ் னியாக்கியும், ஆஸ்திரிய வீராங்கனை பசக்கும் மோதினர். 

இதன் முதல் செட்டில் கரோலின் 6 -2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பின் பு நடந்த 2-வது செட்டில் 2 -2 என்ற கணக்கில் சமனாக இருந்த போது , 

ஆஸ்திரிய வீராங்கனை காயம் காரண மாக விலகினார். 

இதனால் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

மற்றொரு ஆட்டத்தில் சீன வீராங்க னை நா லீ 6 -4,6 -2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை அலி சாகர் நெட்டை வீழ்த்தினார். 

செக். குடியரசு வீராங்கனை பெட்ரா விட்டாவோவும், ருமேனிய வீராங் கனை மோனிகாவும் மற்றொரு ஆட்ட த்தில் மோதினர். இதில் செக். வீராங் கனை 6 -4, 6 -1 என்ற கணக்கில் வென்றார். 

ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் ஹெர் பர் 6 -4, 6 -4 என்ற நேர் செட் கணக்கில் ருமேனிய வீராங்கனை சொர்னா கிறி ஸ்டியானாவை வீழ்த்தி 2 -வது சுற்றுக் கு முன்னேறினார். 

போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ரத் வன்ஸ்கா 6 -7, 2 -6 என்ற நேர்செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனை ஜெ மி ஹம்ப்டனிடம் தோல்வி அடைந் தார். 

இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் ஹூபர் (அமெரிக்கா) ஜோடி  7 -6, 7 -6 என்ற நேர் செட் கணக்கில்     ஜூராக் (குரோசியா) மற்றும் வாட்சன் (ஜெர்மனி ) இணையை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்