முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் பக்தர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்தா? உமர் மறுப்பு

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர்,ஜூன்.21 - அமர்நாத் பனி லிங்க கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படலாம் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருப்பதை ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா அடியோடு மறுத்துள்ளார். அமர்நாத் செல்லும் பக்தர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். 

இமயமலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் குகைக்கோயில் உள்ளது. இங்கு பனி லிங்கத்தை தரிசிக்க வருடந்தோறும் லட்சக்கணக்கானோர் நாடு முழுவதும் இருந்து சென்று வருவார்கள். இந்த கோயில் யாத்திரை விரைவில் தொடங்க உள்ளது. அமர்நாத் குகைக்கோயிலுக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு மூன்றடக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும். இந்தாண்டு அமர்நாத் யாத்ரீகர்களுக்கு தீவிரவாதிகளால் பேராபத்து இருக்கிறது என்று புலனாய்வு ஏஜன்சிகளை மேற்கோள் காட்டி ஒரு சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. 

இந்தநிலையில் வருகின்ற 28-ம் தேதி யாத்திரை தொடங்க உள்ளது. இதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து முதல்வர் உமர் அப்துல்லா நேற்று உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். கூட்டத்தின்போது அமர்நாத் யாத்ரீகர்களுக்கு கடந்தாண்டை விட இந்தாண்டு தீவிரவாதிகளால் ஆபத்து அதிகமாக இருக்கிறதா என்று கேட்டேன். கூட்டத்தில் கலந்துகொண்ட அணைவரும் இல்லை என்று ஒரே வாரத்தையில் கூறிவிட்டனர் என்று தனது இரண்டாவது டிவிட்டரில் கூறியுள்ளார். யாத்ரீகர்களுக்கு ஆபத்து இருப்பதை பத்திரிகைகள் மிகைப்படுத்தி வெளியிடுகின்றன என்று உமர் அப்துல்லா அதில் கூறியுள்ளார. வழக்கம்போல் யாத்ரீகர்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். கடந்தாண்டு மூன்றடக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்றும் உமர் அப்துல்லா கூறியுள்ளார். 

அமர்நாத் யாத்திரை வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி முடிவடையும். அமர்நாத் குகைக்கோயில் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பல்தால் மற்றும் பஹல்காம் வழியாக அமர்நாத் பக்தர்கள் செல்வார்கள். இந்த பாதை மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால் ஏற்றமும் இறக்கமுமாக செல்ல வேண்டும். இந்த பாதையில் தீவிரவாதிகள் மறைந்திருந்து பக்தர்களை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல அடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago