முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் வியூகம்: எடியூரப்பாவை சந்திக்க மோடி திட்டம்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

நாக்பூர், ஜூன். 21 - கோவாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரசார குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இதற்கு கட்சியில் சலசலப்பு எழுந்த போதும் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையீட்டினால் சமாதானப்படுத்தப்பட்டன. பின்னர் டெல்லி சென்ற மோடி, பா.ஜ.க. வின் மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். 

இந்நிலையில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைமையகத்துக்கு நரேந்திர மோடி அடுத்த வாரம் செல்ல இருக்கிறார். அப்போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் கர்நாடக ஜனதா தளத்தின் தலைவருமான எடியூரப்பாவை நேரில் சந்தித்து பேசவும் மோடி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இச்சந்திப்புக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிகிறது. தென்னிந்தியாவிலேயே பா.ஜ.க. வை முதன் முதலில் மாநில ஆட்சியைக் கைப்பற்ற வைத்தவர் எடியூரப்பா. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தாலும் கூட அது உட்கட்சி மோதல்களால் சிதைந்து போனது. அண்மையில் முடிவடைந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அக்கட்சியிலிருந்து வெளியேறிய எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம், ஸ்ரீராமுலு கட்சி மூன்றாக சிதைந்து போட்டியிட்டதால் காங்கிரஸ் கட்சி எளிதாக ஆட்சியைப் பிடித்தது. 

இந்நிலையில் லோக்சபா தேர்தல் வர உள்ளது. லோக்சபா தேர்தலை பா.ஜ.க., நரேந்திர மோடி தலைமையில் எதிர்கொள்வதால் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் மோடியின் நண்பரான அமித்ஷா தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார். இதே போல் தான் லோக்சபா தேர்தலுக்காக நாக்பூரில் எடியூரப்பா- மோடி சந்திப்பு நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளமும், பாரதிய ஜனதா கட்சியும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுக் கொடுத்து தேர்தலை எதிர்கொள்வது என்ற உடன்பாட்டை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago