முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை: ரிசர்வ் வங்கி

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 21 - ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரெபோ ரேட் எனப்படும் வட்டி விகிதத்த்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்திருக்கிறது. ரெபோ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கடன் அளிக்க, வாங்கும் வட்டி விகிதமாகும். அனைத்து வங்கிகளும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரெபோ ரேட் விகிதத்தில் கடன் பெற்று, பிறகு சிறிது வட்டியை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு கடனாகத் தருகிறது. ஆக, ரெபோ ரேட் குறைக்கப்பட்டிருந்தால், வாடிக்கையாளர்களின் வட்டி விகிதங்களும் குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் ரிசரவ் வங்கி, எவ்வித வட்டி குறைப்பையும் செய்யவில்லை. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால், நம்முடைய வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர்க் கடன் போன்றவற்றின் மாதாந்திர கடன் தவணைத் தொகையில் எவ்வித மாற்றமும் இருக்காது. 

மேலும் வட்டி விகிதம் இப்போதைக்கு குறையுமா இல்லையா என்பதை யூகிக்க இயலாது. பணவீக்கம் நன்றாக குறைந்தால் மட்டுமே வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது, நுகர்வோர் விலைக் குறியீடு மிகவும் உயர்ந்து இரண்டு இலக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் பணவீக்கம் ஒரு பக்கம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி அடைகிறது. இதனால் நடப்பு கணக்கில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago