முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு திட்டங்களை இணைக்க அமைச்சரைவை ஒப்புதல்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.21 - மத்திய அரசு திட்டங்களை இணைக்கும் திட்டக்கமிஷனின் முடிவுக்கு மத்திய கேபினட் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. 12-வது ஐந்தாண்டு திட்ட செயல்பாடுகளை கண்காணிக்கவும் திட்டங்களை திறம்பட செயல்படுத்தவும் மத்திய அரசின் 147 திட்டங்களை இணைக்க திட்டக்கமிஷன் திட்டம் வகுத்துள்ளது. இதற்கு நேற்று நடைபெற்ற மத்திய கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எென்று கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய ஒலிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மணீஷ் திவாரி தெரிவித்தார். மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் தலைமையிலான அமைச்சர்கள் குழு கடந்த மாதம் இந்த 147 திட்டங்களை 75 திட்டங்களுக்குள் கொண்டுவர ஒப்புதல் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டங்களை திறம்பட செயல்படுத்த மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் 10 சதவீதத்தை மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் இந்த நிதியை மாநில அரசின் நிரந்தர நிதிக்கு மாற்றவும் அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பு மத்திய அரசு ஒதுக்கும் நிதி ஏஜன்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இதில் திருப்தி அடையாத மத்திய அரசு தற்போது புதிய முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. மத்திய அரசின் இந்த 147 திட்டங்களை செயல்படுத்தும்போது தேக்கம் ஏற்படுகிறது. இதனால் திட்டங்களை திறம்பட செயல்படுத்த மத்திய அரசின் இந்த திட்டங்களை இணைத்து 59 திட்டங்களுக்குள் கொண்டுவர வேண்டும் என்று சதுர்வேதி கமிட்டி ஆய்வு செய்து பரிந்துரை செய்திருந்தது. இதை திட்டக்கமிஷனும் ஏற்றுக்கொண்டது. முதலில் அறிவித்த 147 திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய விவசாய அமைச்சகம் மலைசாதியினர் விவகாரத்துறை அமைச்சகம் ஆகியவைகளுக்கும் இதர அமைச்சகங்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடு இருந்தது. இதை போக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. 147 திட்டங்களில் சில திட்டங்கள் நீடிக்க வேண்டும் என்றும் இந்த இரண்டு அமைச்சகங்களும் கூறிவந்தன. இந்த மாதிரி மத்திய அரசு திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் மத்திய அரசின் 147 திட்டங்கள் 70 திட்டங்களுக்குள் இணைக்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்