முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கான்பெடரேசன் கால்பந்து: அரைஇறுதியில் பிரேசில்-இத்தாலி

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

போர்ட்லேசா (பிரேசில்),ஜூன். 21 - கான்பெடரேசன் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் மற்றும் இத்தா லி அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறின. பிரேசில் நாட்டில் உள்ள போர்ட்லே சா நகரில் கான்பெடரேசன் கோப்பை கால்பந்து போட்டி கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வருகிறது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி அணிகள் களம் இறங்கின. இந்தப் போட்டி தற்போது அரை இறு திக் கட்டத்தை அடைந்துள்ளது. 

சர்வதேச அளவில் முக்கிய போட்டிக ளில் ஒன்றான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் அபாரமான ஆட்ட த்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ் வித்து வருகின்றனர். 

இந்தப் போட்டியில் 8 நாடுகள் பங்கே ற்று விளையாடி வருகின்றன. அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். 

ஏ பிரிவில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் பிரேசில் மற்றும் மெக்சி கோ அணிகள் மோதின. இதில் பிரேசி ல் 2- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

பிரேசில் அணி தரப்பில், நெய்மார் ஆட்டத்தின் 9-வது நிமிடத்திலும், ஜோ 93-வது நிமிடத்திலும் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்த னர். 

இந்தப் போட்டியில் பிரேசில் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 2- 1 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது. இதன் மூலம் பிரேசில் அரை இறுதிக்கு முன்னேறியது. 

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்ட த்தில் இத்தாலி மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இத்தாலி 4 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூல ம் இத்தாலி 2-வது வெற்றியைப் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.  

இத்தாலி அணி முன்னதாக தொடக்க ஆட்டத்தில் 2 -1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணியை வென்று இருந்த து குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் 2 தோல்வியைப் பெற்ற மெக்சிகோ மற்றும் ஜப்பான் அணிகள் வெளியேற்றப்பட்டன. ஆறு தல் வெற்றிக்காக அந்த அணிகள் 22 -ம் தேதி மோத உள்ளன. 

ஏ பிரிவில் முதல் இடத்தைப் பிடிப்பத ற்கான ஆட்டத்தில் பிரேசில் மற்றும் இத்தாலி அணிகள் மோத உள்ளன. 

பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்பெயி ன் அணி தொடக்க ஆட்டத்தில் உருகு வே அணியை வென்று இருந்தது. நைஜீ ரியா முதல் ஆட்டத்தில் தஹுதியை வென்று இருந்தது. 

ஸ்பெயின் அணி அடுத்த ஆட்டத்தில் தஹுதியையும், நைஜீரியா- உருகுவே அணியுடனும் மோத உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்