முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் மூலம் 800 பேர் மீட்பு

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூன். 21 - உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மாநிலமே உருக்குலைந்து போனது. பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவாலும், ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்ததாலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதில் பலர் பலியானார்கள். அங்குள்ள கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொண்ட 72 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். வெள்ளத்தில் கேதர்நாத் கோயிலே மூழ்கியது. 

ஆந்திர மாநிலம் ஐதராபாத், ஸ்ரீகாகுளம், குண்டூர், அனந்தபுரம், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி ஆகிய இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு புனித யாத்திரை சென்றுள்ளனர். இவர்களில் 2,351 பேர் வெள்ளத்தில் சிக்கி இருப்பது இதுவரை தெரியவந்துள்ளது. 24 ஹெலிகாப்டர்கள் மூலம் 800 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உத்தரகாசியில் 160 பக்தர்கள் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. விசாகப்பட்டினத்தை சேர்ந்த 12 பெண்கள் கேதர்நாத் உதவி மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ஆந்திர மக்களுக்கு உதவ அரசு சார்பில் உயரதிகாரி சஞ்சய்குமார் உத்தரகாண்ட் அனுப்பப்பட்டுள்ளார். மேலும் ஆந்திராவில் இருந்து 2 மீட்பு குழுவும் உத்தரகாண்ட் விரைந்துள்ளது. தெலுங்கு மக்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர டெல்லியில் இருந்து 2 பஸ்களை ஆந்திர அரசு அனுப்பி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை ஆந்திர அரசு சேகரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்