முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையை சுருட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கார்டிப், ஜூன். 22 - சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று கார்டிப் நகரில் 2 வது அரையிறுதியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணியை புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா தங்களது ஆக்ரோஷ பந்து வீச்சால் மிரள வைத்தனர். அஸ்வினும் சுழலில் மிரட்டினார். இதனால் குசால் பெரேரா 4, திரிமன்னே 7, சங்ககரா 17, ஜெயவர்த்தனே 28, மென்டிஸ் 25, பெரேரா 0, குலசேகரா 1 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

மேத்யூஸ் மட்டும் தாக்குப்பிடித்து ஆடி 89 பந்துகளில் தலா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 51 ரன் எடுத்தார். முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. தில்ஷான் 19, மலிங்கா 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தில்ஷான் 17 ரன் எடுத்து காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறியதும் திரிமன்னே, சங்கரா, ஜெயவர்த்தனே உள்ளிட்ட வீரர்கள் அதிகளவில் பந்துகளை வீணடித்ததும் மந்தமான ரன் குவிப்பிற்கு காரணமாக அமைந்தது. 

இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா, அஸ்வின் தலா 3, புவனேஷ்வர் குமார், ஜடேஜா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. வழக்கம் போல் தவான் - ரோகித் ஷர்மா ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ரோகித் ஷர்மா 33 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 92 பந்தில் ஒரு சிக்சர், 6 பவுண்டரியுடன் 68 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 

கோஹ்லி 64 பந்தில் 1 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்னும், ரெய்னா 7 ரன்னும் சேர்க்க முடிவில் இந்தியா 35 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது இஷாந்த் ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது. நாளை 23 ம் தேதி நடைபெறும் பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையில் பைனலுக்கு முன்னேறுவது இது 3 வது முறையாகும். இதற்கு முன்னர் 2000 மற்றும் 2002 ல் பைனல் வரை முன்னேறியிருந்தது. 2000 ல் நியூசிலாந்திடம் பைனலில் கோட்டை விட்டது. 2002 ல் இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago