முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.வி. டாக் ஷோக்கள்: மம்தா பானர்ஜி கருத்து

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, ஜூன். 22  - தற்போது சில டி.வி.களில் நடத்தப்பட்டு வரும் டாக் ஷோக்களைப் பார்க்கும் போது அவற்றுக்கும், ஆபாசப் படங்களுக்கும் வித்தியாசமே தெரியவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் தொடர்ந்து கற்பழிப்புகளும், பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்தபடி உள்ளன. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் தர்ம சங்கடமாகியுள்ளது. மக்களும், பல்வேறு தரப்பினரும் மம்தா மீது அதிருப்தியைக் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சிந்தனையாளர்கள் மம்தாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால் அவர்கள் மீது காட்டமாக இருக்கிறார் மம்தா. 

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து கொல்கத்தாவில் சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் பேரணி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சிந்தனையாளர்கள் மீதும், அறிவுஜீவிகள் மீதும் பாய்ந்துள்ளார் மம்தா இதுகுறித்து கூறுகையில், சில டி.வி. சானல்கள் மிகவும் மோசமான முறையில் டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. அவற்றை ஆபாசப் படங்களுடன்தான் ஒப்பிட வேண்டும். மேலும் டாக் ஷோ போன்றவற்றில் பங்கேற்கும் நடுவர்கள் ஆபாசப் படங்களுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். ஆனால் இவர்கள் கற்பழிப்பு குறித்து சாடுகிறார்கள். பாலியல் ரீதியான குற்றங்களைத் தூண்டும் வகையில்தான் டி.வி. டாக் ஷோக்கள் உள்ளன. இவை பெண்களுக்கு அவமானத்தையே கொண்டு வருகின்றன. 2- 3 சானல்கள்தான் இப்படிச் செய்கின்றன. கற்ழிப்புகள் குறித்து அவர்கள் இஷ்டத்திற்கு எதையாவது பேசுகிறார்கள். குழந்தைகளும் இதைப் பார்ப்பார்களே என்ற உணர்வு அவர்களுக்கு இல்லை. கற்பழிப்பு குறித்து மிகவும் சுவாரசியமாக இந்த நடுவர்களும் பேசுகிறார்கள். சமூகத்திற்காக இவர்கள் பணியாற்றுவதில்லை. மாறாக பணத்துக்காக பேசுகிறார்கள். திரைப்பட இயக்குநர் அபர்ணா சென் உள்ளிட்ட பல்துறைப் பிரமுகர்களும் மம்தா பானர்ஜி ஆட்சியில் கற்பழிப்புகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து விட்டதாக சாடியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்