முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி பட்டம் வெல்லுமா?

சனிக்கிழமை, 22 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பிர்மிங்ஹாம், ஜூன். 23 - சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பட்டத்தைக் கைப்பற்ற இந்தியா மற் றும் இங்கிலாந்து அணிகள் இன்று உச்ச கட்ட மோதலில் ஈடுபட உள்ளன. இந்திய அணி ஏற்கனவே ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றது. எனவே 2- வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்குமா? என்ற எதிர்பா ர்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐ.சி.சி. சார்பிலான சாம்பியன்ஸ் கோ ப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந் தில் கடந்த 2 வார காலமாக நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் கோப்பை க்காக களம் இறங்கின. 

இவை ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. முன்னதாக லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதல் 2 இடம் பிடித்த அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. 

இதன் முதல் அரை இறுதியில் இங்கி லாந்து அணி தென் ஆப்பிரிக்காவை எளிதில் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. 

அடுத்து நடந்த 2-வது அரை இறுதியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ் த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி  பெற்றது. 

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி பிர்மிங்ஹாம் நகரில் இன்று பிற்பகல் நடக்க இருக்கிறது. இத ற்காக இரு அணிகளும் ஆயத்தமாக உள்ளன. 

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் காலடி எடுத்து வைத்தது முதல் இந்தப் போட்டியில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறது. 

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முத ல் போட்டி தவிர மற்ற போட்டிகளில் எளிதான வெற்றியைப் பெற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கேப்டன் தோனி புத்தி சாதுர்யத்துடன் இந்திய அணியை வழி நடத்திச் செல்கிறார். இந்திய அணியின் பேட்டிங், பெளலிங் மற்றும் பீல்டிங் ஆகிய மூன்று இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக உள்ளன. 

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை சொந்த மண்ணில் விளையாடு வது அந்த அணிக்கு கூடுதல் பலமாகு ம். எனவே இந்த முறை பட்டம் வெ ல்ல அந்த அணி ஆர்வமாக உள்ளது. 

கிரிக்கெட்டின் பிறப்பிடமாக இங்கி லாந்து திகழ்ந்த போதிலும், கடந்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி முக் கிய போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி தோற்பதை வாடிக்கையா கக் கொண்டு உள்ளது. 

இங்கிலாந்து அணி ஐ.சி.சி.சார்பில் நடத்தப்படும் உலகக் கோப்பை மற்று ம் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற் றில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 

ஆனால் மே.இ.தீவில் பார்படோஸ் தீவில் நடந்த டி - 20 உலகக் கோப்பை யில் ஒரு முறை பட்டம் வென்று இருக் கிறது. 

சாம்பியன் கோப்பைபோட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப் பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தருகின்றனர். 

ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத் துத் தருகின்றனர். 

இதனால் இந்திய அணி பெரும்பாலா  ன போட்டிகளில் 4 விக்கெட் இழப்பிற் குள்ளேயே வெற்றி பெற்று விடுகிறது. 

தவிர, சுரேஷ் ரெய்னா, தோனி மற்றும் ஜடே ஜா ஆகியோரும் பேட்டிங்கிற்கு வலுசேர்க்கின்றனர். 

பெளலிங்கில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் கலக்கி வருகின்றனர். 

இங்கிலாந்து அணியின் பலம் பந்து வீச் சில் தான் உள்ளது. ஆண்டர்சன், பிராட் மற்றும் பின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். அவர்களுக்கு பக்கப லமாக டிரட்வெல் வீசி வருகிறார். 

இருந்த போதிலும், இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தி ன் பந்து வீச்சு எடுபடவில்லை. கேப்டன் சங்கக்கரா இங்கிலாந்து பந்து வீச்சை நார் நாறாகக் கிழித்து 134 ரன் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளு  க்கு இடையேயான இன்றைய இறுதிப் போட்டி ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு துவங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago