முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் பலி

சனிக்கிழமை, 22 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூன். 23 - பாகிஸ்தானில் எம்.பி.யும், அவரது மகனும் மர்ம ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலியாகினர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு நேரத்தில் மார்க்கெட் பகுதியில் ஆப்கன் தூதரக உயரதிகாரி நஜிபுல்லா இப்ராஹிம் சென்று கொண்டிருந்தார். மர்ம ஆசாமி ஒருவன் அவரை சரமாரியாக சுட்டு விட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினான். இது தீவிரவாத தாக்குதலாக இருக்காது. கொள்ளையடிக்கும் நோக்கில் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 

கைபர் அருகே பெஷாவரில் குல்ஷன் காலனியில் உள்ள மசூதியில் ஏராளமானோர் தொழுகைக்காக கூடியிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் சிலர் மசூதியின் பின்புறமாக உள்ளே நுழைந்தனர். மசூதிக்குள் குழந்தைகள் உட்பட 200 க்கும் அதிகமானோர் இருந்தனர். இந்த நிலையில் அந்த மர்ம ஆசாமிகள் வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 30 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதே போல் கராச்சியில் தொழுகைக்காக சென்ற எம்.பி. சஹீத் குரோஷியையும், அவரது மகன் உபெய்ஸ் என்பவரையும் பைக்கில் வந்த ஆசாமிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர். சஹீத் குரோஷி சிந்து மாகாணத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்