முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் ரூ.52 ஆயிரம் கோடி நீர்ப்பாசன ஊழல்

சனிக்கிழமை, 22 ஜூன் 2013      ஊழல்
Image Unavailable

 

ஐதராபாத், ஜூன். 23 - ஆந்திர மாநிலத்தில் கடந்த 2004 ம் ஆண்டு ஜலயக்ஞம் என்ற புதிய நீர்ப்பாசன திட்டத்தை மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி தொடங்கி வைத்தார். ரூ. 1.86 லட்சம் கோடி செலவில் 86 பெரிய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற இதில் திட்டமிடப்பட்டது. 

ராஜசேகரரெட்டி உத்தரவின் பேரில்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து நீர்ப்பாசன திட்ட வேலைகள் நடந்து வந்தன. அந்த பணி செலவுகளை கணக்கு தணிக்கை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தணிக்கை அதிகாரிகளின் அறிக்கையை பிரின்சிபல் அக்கவுண்டன்ட் ஜெனரல் வாணி ஸ்ரீராம் தாக்கல் செய்தார். அதில் நீர்ப்பாசன திட்டங்களில் பெரியளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக ஆதாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீர்ப்பாசன திட்டங்களை சரியாக திட்டமிடாமை, நிலம் கையகப்படுத்துதல் ஏற்பட்ட தாமதம், திட்டப் பணிகளை முடிப்பதில் ஆகியவற்றால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மாநில அரசு இந்த திட்டங்களுக்கு இதுவரை 80 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக கூறியுள்ளது. ஆனால் 86 திட்டங்களில் வெறும் 13 திட்டங்களே முடிந்துள்ளன. மற்ற நீர்ப்பாசன திட்டங்கள் பாதியிலேயே நிற்கின்றன. ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணத்தில் ரூ. 52 ஆயிரம் கோடிக்கு ஊழல்கள் நடந்திருப்பது கணக்கு தணிக்கை துறை அம்பலப்படுத்தி உள்ளது. இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்