முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க முறைகேடு: காங். எம்.பி. வீட்டில் சோதனை

சனிக்கிழமை, 22 ஜூன் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 23 - நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டாலின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. 2008 ம் ஆண்டில் தவறான தகவல்கள் அளித்த ஜிண்டாலின் நிறுவனங்களுக்கு ஜார்கண்டில் இரண்டு நிலக்கரி சுரங்கங்களுக்கான உரிமங்கள் வழங்கப்பட்டன. அப்போது நிலக்கரி துறை இணை அமைச்சராக இருந்தவர் தாசரி நாராயணராவ். அதற்கு கைமாறாக தாசரி நாராயணராவுக்கு சொந்தமான சவுபாக்யா மீடியா என்ற நிறுவனத்தின் பங்குகளை ஜிண்டாலின் மற்றொரு நிறுவனம் மிகப் பெரிய தொகை அளித்து வாங்கியது என்று சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது. 

இந்த வழக்கில் நவீன் ஜிண்டால், தாசரி நாராயணராவ் ஆகிய இருவர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஜிண்டாலின் நான்கு நிறுவனங்கள் தாசரியின் சவுபாக்யா மீடியா ஆகியவையும் நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இம்மாதம் 11 ம் தேதி புது டெல்லியில் உள்ள ஜிண்டாலின் வீட்டை சி.பி.ஐ. சோதனையிட்டது. அப்போது ஜிண்டாலும் அவரது குடும்பத்தினரும் வெளிநாடு சென்றிருந்தனர். 

அந்த வீட்டில் பல அலமாரிகள், பீரோக்கள் பூட்டப்பட்டிருந்ததால் சி.பி.ஐ. அவற்றை சோதனையிட முடியவில்லை. அதனால் அவை அனைத்துக்கும் சி.பி.ஐ. சீல் வைத்து விட்டு சென்றது. ஜிண்டால் விரைவில் நாடு திரும்பி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவரும், அவரது குடும்பத்தினரும் இந்தியா திரும்பி உள்ளனர். இதை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நவீன் ஜிண்டாலின் வீட்டுக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். அவரது முன்னிலையில் அனைத்து அலமாரிகளும், பீரோக்களும் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்