முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொய்லி பதவி விலக இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

சனிக்கிழமை, 22 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 23 - தேச நலனுக்கு விரோதமாக செயல்படும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மத்திய தலைமை குழு டெல்லியில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

எரிவாயு விலையை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதன் மூலம் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தேச நலனுக்கு விரோதமாகவும், பெரும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். எனவே அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். மேலும் இந்த விவகாரம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைப்பது ஏற்கத்தக்கது. 

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக மொய்லி செயல்பட்டு வருகிறார் என்பதை கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா ஏற்கனவே அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தி உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறும் எரிவாயுவுக்கு கொடுக்க வேண்டிய விலை குறித்து ரங்கராஜன் குழு மற்றும் தனது அமைச்சக அதிகாரிகள் கூறியதை விட அதிகம் கொடுக்க வேண்டும் என்று மொய்லி தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்துள்ளார் என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

எரிவாயு விலையை 60 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை தொடர்பாக முடிவெடுப்பதை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு ஒத்தி வைத்துள்ள சூழ்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்