முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தல் மெமோரியல் செஸ்: ஆனந்த் - கிராம்னிக் ஆட்டம் டிரா

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

மாஸ்கோ, ஜூன். 24 - ரஷ்யாவில் நடைபெற்று வரும் தல் மெமோரியல் செஸ் போட்டியின் 8 - வ து சுற்றில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் விளாடிமிர் கிராம்னி க்கிற்கு இடையேயான ஆட்டம் டிரா வானது. இந்தப் போட்டியில் உலக சாம்பிய னான விஸ்வநாதன் ஆனந்த் மோசமா க ஆடி வருகிறார். அவர் தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்து விட்டார்.  

எனவே அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஆனா ல் இந்த டிரா பின்னடைவை குறைக்கு ம் என்று தெரிய வருகிறது. 

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவி ல் தல் மெமோரியல் செஸ் போட்டி கடந்த 2 வார காலமாக வெகு விமர் சையாக நடந்து வருகிறது. 

இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் களத்தில் குதித்து உள்ளனர். இந்தப் போ  ட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத் தில் உள்ளது. 

மொத்தம் 9 சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியில் 8 சுற்றுக்கள் முடிவ டைந்து விட்டன. இந்தப் போட்டியில் சாம்பியன் யார் என்பது அடுத்த சுற்றி ல் தெரிய வரும். 

இதன் 8 -வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் இந்திய கிராண்ட்  மாஸ் டர் ஆனந்தும், ரஷ்ய வீரர் விளாடிமிர் கிராம்னிக்கும் மோதினர். 

கடும் சவாலான இந்தப் போட்டியில் கிராம்னிக்குடனான ஆட்டத்தை டிரா செய்தார். கிராம்னிக் வெற்றிக் காக போராடிய போதிலும் அவரது முயற்சி பலிக்க வில்லை. 

இதற்கு முன்பு இங்கு சாம்பியன் பட்ட ம் வென்ற கிராம்னிக் இந்தப் போட்டி யில் மோசமாக ஆடி கடைசி இடத் தைப் பிடித்து இருக்கிறார். 

8-வது சுற்றின் முடிவில் இஸ்ரேல் வீரர் போரிஸ் ஜெல்பாண்ட் 5.5 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 5 புள் ளியுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். 

இத்தாலி வீரர் பேபியானோ கருவா  னா, அமெரிக்க வீரர் நகமுரா மற்றும் ரஷ்ய வீரர் டிமிட்ரி அன்ட்ரிகின் ஆகி யோர் இணைந்த 3-வது இடத்தில் உள்ளனர். மேற்படி மூவரும் தலா 4.5 புள் ளி பெற்று உள்ளனர். 

ரஷ்ய வீரரான செர்ஜி கர்ஜாகின் 7-வது இடத்திலும், அன்ட் ரேகின் 8 -- வது இடத்திலும் உள்ளனர். செர்ஜி 3.5 புள் ளியுட னும், ரேகின் 3 புள்ளியுடனும் உள்ளனர். 

ரஷ்ய முன்னணி வீரர்களில் ஒருவரான கிராம்னிக் மற்றும் மொரேசெவிச் இரு வரும் இணைந்து கடைசி இடத்தில் உள்ளனர். இருவரும் தலா 2.5 புள்ளி பெற்று உள்ளனர். 

இஸ்ரேல் வீரர் போரிஸ் ஜெல்பாண்ட் 8 -வது சுற்றில் அஜர்பைஜான் வீரர் சக் ரியாருடன் மோதினார். இந்த ஆட்டம் இறுதியில் டிராவானது. 

உலக நம்பர் - 1 வீரரான மேக்னஸ் கார் ல்சன் அமெரிக்க வீரர் நகமுராவுடன் மோதினார். இதில் மேக்னஸ் வெற்றி பெற்று 5 புள்ளியுடன் 2-வது இடத்திற்கு முன்னேறினார். 

இத்தாலி வீரர் பேபியானோ ரஷ்ய வீரர் அலெக்சாண்டருடன் மோதினார். இந் த ஆட்டம் டிரா ஆகும் என்று எதிர்பா ர்க்கப்பட்டது. ஆனால் கடைசி கட்டத் தில் கருவானா சிறப்பாக ஆடி வெற்றி பெற்று 3 -வது இடத்திற்கு முன்னேறி னார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்