முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம்பிள்டன் துவக்கம்: பெடரர் மீண்டும் பட்டம் வெல்வாரா?

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூன். 24 - இங்கிலாந்து நாட்டில் இந்த வருடத்தி ன் 3 -வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று துவங்க இருக்கிறது. டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரபலமானது கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும். ஆண்டு தோறும், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்ட

ன், அமெரிக்க ஓபன் ஆகியவை நான்கு போட்டிகளாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் , பிரெஞ்சு ஓபன் ஆகியவை முடிந்து விட்டன. ஆஸ்திரேலிய ஓபனில் பட்டத்தை ஜோகோவிச்சும், அசரென்காவும், பிரெஞ்சு ஓபனில் ரபேல் நடாலும், செரீனாவும் பட்டத்தை கைப்பற்றினார்கள். 

3-வது கிராண்ட ஸ்லாமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று லண்டனில் துவங்குகிறது. ஜூலை 7-ம் தேதி வரை நடக்கும் இந்தப் போட்டியில் முதல் நிலை வீரரான ஜோகோவிச். நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் , 3-ம் நிலை வீரர் ஆன்டி முர்ரே, 4-ம் நிலை வீரர் ரபேல் நடால், போன்ற முன்னணி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். 

விம்பிள்டன் போட்டிகளில் ரோஜர் பெடரர் அசைக்க முடியாத வீரராகத்திகழ்கிறார். அவர் 7 முறை பட்டத்தை கைப்பற்றி உள்ளார். இந்த முறையும் பெடரர் வெற்றி பெற்றால் பீட் சாம்ராசை முந்தி புதிய வரலாறு படைப்பார். அமெரிக்காவைச் சேர்ந்த பீட் சாம்ராஸ் 7 முறை விம்பிள்ன் பட்டத்தை பெற்றவர். ஒட்டு மொத்தமாக பெடரர் 17 கிராண்ட ஸ்லாம் பட்டம் வென்று அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற வீரராகத் திகழ்கிறார். 

பெடரரின் வரலாற்று சாதனையை நடால், முர்ரே, ஜோகோவிக் தடையாக இருப்பார்கள். பெடரரும், நடாலும், கால் இறுதியிலேயே மோத வாய்ப்பு உள்ளது. நடால் சமீபத்தில் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படை

த்தார். அவர் விம்பிள்டன் பட்டத்தை 2 முறை பெற்று உள்ளார். விம்பிள்டன் பட்டத்தை 3-வது முறையாகவும், 14 -வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் பெறுவதில் நடால் ஆர்வமாக உள்ளார். ஜோகோவிக் விம்பிள்டன் பட்டத்தை 2011 -ம் ஆண்டு கைப்பற்றினார். முதல் நிலை வீரரான அவர் இந்த முறை மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். கடந்த முறை இறுதிப் போட்டியில் தோற்ற உள்ளூர் வீரர் முர்ரே, முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்திற்காக காத்திரு

க்கிறார். ஆண்கள் பிரிவைப் போல பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் கடும் போட்டி நிலவுகிறது. முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ், 2-ம் நிலை வீராங்கனை அசரென்கா, 3-வது தரவரிசையில் இருக்கும் மரியா ஷரபோவா, ரட்வன்ஸ்

கா போன்ற முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். செரீனா விம்பிள்டன் பட்டத்தை 5 முறை கைப்பற்றியவர். தற்போது, 6-வது முறையாக கைப்பற்ற ஆவலுடன் உள்ளார். அவருக்கு ஷரபோவா, அசரென்கா, போன்றவர்கள் கடும் சவாலாகதிகழ்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்