முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானில் இந்தியா முக்கிய பங்களிப்பு அளிக்க வேண்டுகோள்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

டெல்லி, ஜூன் - 25 ​- ஆப்கானிஸ்தானில் இனிவரும் காலங்களில் இந்தியா முக்கிய பங்களிப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கேட்டுக் கொண்டிருக்கிறார். அமெரிக்க அமைச்சர் ஜான் கெர்ரி அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல் முறையாக ஒரு உயர்நிலைக் குழுவுடன் இந்தியா வருகை தந்திருக்கிறார். அவருடன் அந்நாட்டின் எரிசக்தித் துறை செயலர், நாசா அமைப்பின் இயக்குநர், பசிபிக் பிராந்திய ராணுவத் தலைவர் அட்மிரல் சாமுவேல் லால்க்லியர் உளிட்டோர் அடங்கிய உயர்நிலைக் குழுவும் இந்தியா வருகை தந்துள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கெர்ரி, ஆசியாவில் அமெரிக்காவின் மிக முக்கிய நட்பு நாடு இந்தியா. ஆசியாவில் நிலையான அரசியல்ல்தன்மையை உருவாக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் சில விஷயங்களில் சமரசங்களை நாங்கள் செய்து கொள்ளமாட்டோம். ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் 2014ஆம் ஆண்டு வெளியேறிய பின்னரும் கூட ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்கும். ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிடக் கூடாது. ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் இந்தியாவின் பங்களிப்பு முதன்மையானது. அந்நாட்டின் தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்தி நம்பிக்கையையும் சுதந்திரமான செயல்பாட்டையும் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவும் பாகிஸ்தானும் நம்பகத் தன்மையோடு முதலீடு செய்ய வேண்டும். பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசு அமைந்திருப்பதால் புதிய மாற்றம் உருவாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்