முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை குறித்து தவறான தகவல்: மா.கம்யூ. அதிர்ச்சி

திங்கட்கிழமை, 24 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்,ஜூன்.25 - அமர்நாத் குகைக்கோயில் யாத்திரை தொடர்பாக மத்திய அரசுக்கு புலனாய்வு ஏஜன்சிகள் தவறான தகவல் கொடுத்துவிட்டதாக கூறப்படுவதற்கு மார்க்ஷிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளது. இந்தாண்டு இன்னும் ஒரு சில நாட்களில் அமர்நாத் பாதயாத்திரை தொடங்க உள்ளது. அமர்நாத்தில் உள்ள பனிலிங்க குகைக்கோயிலில் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் லட்சகணக்கில் செல்வார்கள். இந்த கோயில் இமயமலைப்பகுதியில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருப்பதால் பக்தர்களுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக ஏற்பட்டிருப்பதாக புலனாய்வு ஏஜன்சிகள் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அமர்நாத் பக்தர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள புலனாய்வு ஏஜன்சிகள் மத்திய அரசுக்கு தவறான தகவல் கொடுத்துவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சரும் ராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங்கும் கூறியுள்ளனர். இதற்கு மார்க்ஷிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் அதிர்ச்சியை தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் புலனாய்வு அமைப்புகள் சுயநலம் கொண்டவைகளாக இருக்கின்றன என்றும் அந்த கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago