கனடாவில் கற்பழிப்பு வழக்கில் இந்திய டாக்டர் கைது

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      உலகம்
Doctor1

டொரான்டோ, பிப்.23 - கனடாவில் உள்ள டொரன்டோ நகரைச்சேர்ந்தவர் அமிதாப் சவுகான்(32). இந்தியரான இவர் கனடா குடியுரிமை பெற்று டாக்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று தன் நண்பர் ஒருவருடன் ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு இருவரும் ஒரு பெண்ணை சந்தித்து பேசி நட்பை ஏற்படுத்திக்கொண்டனர். பின்னர் 3 பேரும் மற்றொரு ஓட்டலுக்கு சென்று அங்குள்ள பாரில் மது குடித்தனர். அப்போது அப்பெண்ணுக்கு மதுவில் போதை பொருளை கலந்து கொடுத்தனர். போதையில் மயங்கிய அந்த பெண்ணை இருவரும் மாறி மாறி கற்பழித்தாக தெரிகிறது. இதுகுறித்து டோரன்டோ நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். பிறகு அவர்கள் இருவரையும் கைது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.  கைது செய்யப்பட்ட இவர்கள் தங்களை ஜாமீனில் விடக்கோரி கோர்ட்டில் மனு செய்தனர். அந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: