முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெலிங்டன் முகாமிலிருந்து இலங்கை அதிகாரிகள் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 24 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, ஜூன்.25 - மத்திய அரசை கண்டித்து குன்னூரில் இன்று கண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலார் வைகோ கூறினார். குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதை கண்டித்து. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நாளை (இன்று) இலங்கை ராணுவ அதிகாரிகளை வெளியேற்ற வலியுறுத்தி வைகோ தலைமையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதில் பங்கேற்பதற்காக வைகோ நேற்று மாலை குன்னூர் வந்தார்.

இந்நிலையில் வெளிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்ற வந்த இலங்கை அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் கோவையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்று அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக மதிமுக பொது செயலாளர் வைகோ குன்னூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த இலங்கை ராணுவ அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக நாளை (இன்று) நடக்க இருந்த போராட்டத்துக்கு பதிலாக மத்திய அரசை கண்டித்து குன்னூரில் கண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கை ராணுவ அதிகள் எங்கு சென்றாலும் அவர்கள் இலங்கை திரும்பும்வரை எங்களது போராட்டம் தொடரும் என்று வைகோ தெரிவித்தார். 

இலங்கை அதிகாரிகளுக்கு கடந்த 20 நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டதால் இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் வெலிங்டன் பயிற்சி முகாம் நுழைவாயில் (பிளாக் பிரிட்ஜ்) பகுதியில் போராட்ட களமாக மாறியது. தற்போது இலங்கை அதிகாரிகள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டதால் குன்னூரில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்