முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - மும்பை பஞ்சாப் அணியை வீழ்த்தியது

புதன்கிழமை, 4 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, மே. 4 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை 23 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. 

மும்பை அணி தரப்பில், மாஸ்டர் பிளாஸ்டரான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அப்பா ராயுடு இருவரும் அபாரமாக பேட்டிங் செய்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினர். பொல்லார்டு மற்றும் ரோகித் சர்மா இருவரும் அவர்களுக்

கு பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, முனாப் படேல், மலிங்கா மற்றும் ஹர்பஜன் சிங் மூவரும் நன்கு பந்து வீசி 6 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பொல்லார்டு மற்றும் சைமண்ட்ஸ் இருவரும் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் 40 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும், கேப்டன் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோ

தின. முன்னதாக இதில் பூவா தலையாவில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பி ல், கேப்டன் டெண்டுல்கர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜேக்கப்ஸ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில் இரண்டு வீரர்கள் அரை சதம் அடித்தனர். கேப்டன் டெண்டுல்கர் 45 பந்தில் 51 ரன்னை எடுத்தார். இதில் 3 பவு

ண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில், அவர் ஹாரிஸ் வீசிய பந்தில் நாயரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

அடுத்தபடியாக, அப்பா ராயுடு 37 பந்தில் 51 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரியும், 1 சிக்சரும் அடக்கம். இறுதியில் அவர் சாவ்லா வீசிய சுழலில் சிக்கி ஆட்டம் இழந்தார். தவிர, பொல்லார்டு 11 பந்தில் 20 ரன்னையும், ரோகித்சர்மா 11 பந்தில் 18 ரன்னையும் எடுத்தனர். 

பஞ்சாப் அணி தரப்பில், ஹாரிஸ் 33 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத்தார். பையூஸ் சாவ்லா 37 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிபுல் சர்மா 22 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். 

பஞ்சாப் அணி 160 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை மும்பை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்னை எடுத்தது. இதனால் மும்பை அணி பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த லீக் ஆட்ட த்தில் 23 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. பஞ்சாப் அணியின் தோல்விப்படலம் தொடர்கிறது. 

பஞ்சாப் அணி தரப்பில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான மார்ஷ் மற்றும் துவக்க வீரர் வல்தாட்டி இருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்ததால் அந்த அணி தோல்வியைத் தழுவியது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான எஸ்.இ. மார்ஷ் அதிகபட்சமாக, 47 பந்தில் 61 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். துவக்க வீரர் வல்தாட்டி 38 பந்தில் 33 ரன்னை எடுத்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர,ஏ. நாயர் 14 ரன்னையும், சாவ்லா 10 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் கில்கிறிஸ்ட் பூஜ்யத்தில் ஆட்டம் இழந்தார். 

மும்பை அணி சார்பில் முனாப் படேல் 18 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். மலிங்கா 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஹர்பஜன் சிங் 25 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பொல்லார்டு மற்றும் சைமண்ட்ஸ் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பொல்லார்டு தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்