முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - கொச்சி டஸ்கர்ஸ் அபார வெற்றி

புதன்கிழமை, 4 மே 2011      விளையாட்டு
Image Unavailable

டெல்லி, மே. 4 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் டெல்லியில் நடந்த லீக் ஆட்டத்தில், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை தோற்கடித்து இந்தத் தொடரில் முன்னிலை பெற்று உள்ளது. 

இந்தப் போட்டியில் கொச்சி அணி தரப்பில், பிரண்டன் மெக்குல்லம், பார்த்திவ் படேல் மற்றும் ஹாட்கே ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

முன்னதாக பெளலிங்கின் போது, வினய் குமார் மற்றும் பரமேஸ்வரன் இருவரும் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆர். பி. சிங் மற்றும் ஸ்ரீசாந்த் இவருவரும் அவர்களுக்கு பக்கபலமாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில், டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் 41 - வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கேரளா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி அணி சார்பில், கேப்டன் சேவாக் மற்றும் வார்னர் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களம் இறங்கிய டெல்லி அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 140 ரன்னை எடுத்தது. அந்த அணி வீரர்கள் 2 பேர் கால் சதம் அடித்தனர். 

டெல்லி அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான வேணுகோபால் ராவ் அதிகபட்சமாக, 36 பந்தில் 40 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் பரமேஸ்வரன் வீசிய பந்தில் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக, டி.ஆர். பேர்ட் 15 பந்தில் 27 ரன்னை எடுத்தார். இதில் 5 பவுண்டரி அடக்கம். தவிர, வார்னர் மற்றும் ஓஜா இருவரும் தலா 13 ரன்னையும், கேப்டன் சேவாக் 15 ரன்னையும், மற்றும் நாகர் 18 ரன்னையும் எடுத்தனர். 

கொச்சி அணி தரப்பில், வினய் குமார் 25 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பரமேஸ்வரன் 29 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, ஆர். பி. சிங் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். கொச்சி அணி 141 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை டெல்லி அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 15 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 141 ரன்னை எடுத்தது. 

இதனால் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி இந்த லீக் ஆட்டத்தில், 30 பந்து மீதமிருக்கையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

கொச்சி அணி தரப்பில், துவக்க வீரர் மெக்குல்லம் 19 பந்தில் 37 ரன் னை எடுத்தார். பார்த்திவ் படேல் 31 பந்தில் 37 ரன்னை எடுத்தார். தவிர, ஹாட்கே 13 பந்தில் 24 ரன்னையும், கிலிங்கர் 20 பந்தில் 18 ரன்னையும் எடுத்தனர்.

டெல்லி அணி சார்பில், எம். மார்கெல் 29 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். வான் டெர் மெர்வே 15 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இர்பான் பதான் மற்றும் அகார்கர் ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக பரமே

ஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்