முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பியில் நடந்து சாதனை செய்த அமெரிக்கர்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

அரிசோனா, ஜூன். 26 - கிராண்ட் கேன்யனை ஸ்டீல் கேபில் வயர் மேல் நடந்து நிக் வாலண்டா என்பவர் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த செய்தி தான் ட்விட்டரை கலக்கியுள்ளது. 

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள கிராண்ட் கேன்யானை புளோரிடாவைச் சேர்ந்த நிக் வாலண்டா(34) என்பவர் ஸ்டீல் கேபில் வயரில் நடந்து கடந்துள்ளார். அதாவது அவர் மலையின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு கேபில் வயர் மீது நடந்து சென்றுள்ளார். அவர் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி 22 நிமிடங்களில் நடந்து கடந்துள்ளார். கிராண்ட் கேன்யானை கடந்த முதல் நபர் நிக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர் கேபிலில் நடந்த போது ட்விட்டரில் இது குறித்து 7 லட்சத்திற்கும் அதிகமான ட்வீட்கள் போடப்பட்டுள்ளது. 3 குழந்தைகளின் தந்தையான நிக் கேபிலில் நடக்கையில் கடவுளை வேண்டிக் கொண்டே சென்றுள்ளார். வாலண்டா சர்க்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த நிக்கிற்கு இது பெரிய விஷயம் அல்ல. நிக்கின் சாகசம் தான் ட்விட்டரை கலக்கிய செய்தி ஆகும். இந்த சாகச நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்