முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி முன்னாள் பிரதமருக்கு 7 ஆண்டு சிறை

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

இலன், ஜூன். 26 - இத்தாலியின் முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனிக்கு பாலியல் வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. இத்தாலி பிரதமராக பெர்லுஸ்கோனி இருந்த போது 18 வயதை எட்டாத கரீமா என்ற பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது மிலன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2010 ம் ஆண்டு பெர்லுஸ்கோனியின் பங்களாவில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்ட கரீமாவுக்கு அவர் 7 ஆயிரம் யூரோவை வழங்கியுள்ளார். மேலும் அந்த பெண் திருட்டு வழக்கில் கைதான போது போலீசாரின் விசாரணையில் தலையிட்டு அவரை பெர்லூஸ் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை இத்தாலியின் மிலன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்ட பெர்லுஸ்கோனியும் கரீமாவும் தாங்கள் பாலியல் உறவு கொள்ளவில்லை என்று மறுத்தனர். 

எனினும் இருவருக்கும் இருந்த தொடர்புக்கான ஆதாரங்களை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். பெர்லூஸ்கோனிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் இவ்வழக்கில் பெர்லுஸ்கோனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மிலன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்தது. எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து இத்தாலி ஐகோர்ட்டில் பெர்லுஸ்கோனி மேல்முறையீடு செய்ய வழி இருக்கிறது. மேலும் அவர் எம்.பி.யாக இருப்பதால் கைதாவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்