முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலநிலை மீட்புப்பணியை நிறுத்த முடியாது: தலைமை தளபதி

புதன்கிழமை, 26 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

டேராடூன்,ஜூன்.27  - உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலவும் மோசமான காலநிலையானது எங்களுடைய மீட்புபணியை நிறுத்தமுடியாது என்று விமானப்படை பிரவ்னே கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை,வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை விமானப்படை வீரர்கள் மீட்டு வருகிறார்கள். அங்கு மீண்டும் கனமழை பெய்து வருகிறது. எங்கு பார்த்தாலும் மேகக்கூட்டமாக இருப்பதால் வெளிச்சம் குறைவாக இருக்கிறது. இதனால் விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப்பணியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்றுமுன்தினம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து மதுரையை சேர்ந்த விமானப்படை வீரர் ஒருவர் உள்பட 20 பேர் பலியானார்கள். விபத்து நடந்த இடத்தை விமானப்படை தலைமை தளபதி பிரவ்னே பார்வையிட்டார். பின்னர் அவர் டேராடூனில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் காலநிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் எங்களுடைய மீட்புப்பணியை தடுத்து நிறுத்த முடியாது என்றார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு காலைநிலையோ அல்லது தொழில்நுட்ப கோளாறோ காரணமாக இருக்கலாம். காலநிலை சரியாகுவதற்கு இன்னும் பல நாட்களாகலாம். விமானப்படையினரும் இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையினரும் மீட்புப்பணிகளை மிகவும் சிறப்பாக செய்து வருகிறார்கள். மலைச்சரிவுகளிலும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் இன்னும் ஏராளமானோர் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை மீட்பதே எங்களுடைய முதல் பணியாகும். பத்ரிநாத் மற்றும் ஹர்சில் பகுதிகளில் இன்னும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும்பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்று பிரவ்னே மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்